இந்த பொருட்களை எல்லாம், இப்படி தானம் செய்தால், உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமும், யோகமும் உங்களிடம் சொல்லாமலேயே சென்றுவிடும்.

dhanam

தானம் செய்தால் நல்லது. தானம் செய்வதன் மூலம் பல புண்ணியங்கள் கிடைக்கும் என்று சாத்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதே சாஸ்திரத்தில் தான், இந்த பொருட்களை எல்லாம், இப்படி தானம் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால், சாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகள் தான் இந்த பதிவின் மூலம் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது. எந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது, எப்படி தானம் செய்யக்கூடாது என்பதை பற்றி நிதானத்தோடு இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

annadhanam 1

தானம் என்று சொன்னாலே அந்த வரிசையில் முதன்முதலாக வருவது அன்னதானம் தான். நீங்கள் எந்த கோவிலுக்கு அன்னதானம் செய்வதாக இருந்தாலும், எந்த ஆசிரமங்களுக்கு அன்னதானம் செய்வதாக இருந்தாலும், உங்கள் கைகளால் எல்லா வகையான மளிகைப் பொருட்களையும் நீங்கள் தாராளமாக வாங்கி தரலாம். ஆனால், உங்களது கைகளால் உப்பு, புளி இந்த இரண்டு பொருட்களை வாங்கி தரும் பட்சத்தில், உங்கள் அதிர்ஷ்டம் உங்களை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்து விடுங்கள். உப்பு புளிக்கு தேவையான காசை மட்டும், பணமாக கொடுங்கள்.

இதேபோல் ராஜா யோகத்தோடு வாழ்பவருடைய துணிகளை, இல்லாதவர்களுக்கு தானமாக செய்யும்பட்சத்தில், தானம் செய்பவர்களுடைய யோகமும் அதிர்ஷ்டமும் அவர்களை விட்டு விலகிச் செல்வதற்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. நீங்கள் பயன்படுத்தி, கிழியாமல் நன்றாக இருக்கும் துணிகளை துவைத்து விட்டு, தானம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லப்படவில்லை. அப்படி ஆசிரமங்களுக்கு, இல்லாதவர்களுக்கு தானமாக கொடுக்கும் போது, அவர்களிடத்திலிருந்து 1 ரூபாய் மட்டுமாவது நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

cloth

ஒரு பைசா இப்போது புழக்கத்தில் கிடையாது. ஒரு பைசா பெற்றுக்கொண்டாவது, உங்களிடம் இருக்கும் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, இல்லாதவர்களுக்கு தானம் செய்தால் கூட, அதன் மூலம் உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கு பிரச்சனை வராது. கோடிகோடியாக தானம் செய்பவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அவர்களுக்கு ஏதும் குறை வரவில்லையே என்று சிலருக்கு சந்தேகம் எழலாம்!

- Advertisement -

அதாவது, சில திதிகளில் நாம் செய்யக்கூடிய தானம், நம்முடைய அதிர்ஷ்டத்தை, நாம் யாருக்கு தானமாக பொருட்கள் கொடுக்கிறோமோ, அவர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும். தானம் கொடுக்கும்போது, நாம் நாள் நட்சத்திரம் எதையுமே பார்ப்பது கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மிடமுள்ள அதிர்ஷ்டம் அடுத்தவர்களுக்கு சென்றுவிடும் என்பதற்காகத்தான், இப்படிப்பட்ட வழிமுறைகளையும், சாஸ்திரங்கள் நமக்கு சொல்லி உள்ளது.

one rupee

உங்களுக்கு ஜாதக கட்டத்தில் ஏதாவது தோஷம் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய பழைய துணிமணிகளை நீங்கள் பயன்படுத்திய பொருட்களை, அடுத்தவர்களுக்கு தானமாக கொடுப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. உங்களிடம் இருக்கக்கூடிய தோஷத்தின் தாக்கமானது,  அடுத்தவர்களுக்கு செல்லக் கூடாது, என்பதற்காக சொல்லப்பட்டுள்ள சாஸ்திரம் தான் இது. இந்த இடத்திலும், நீங்கள் தானமாக கொடுக்கக்கூடிய பொருட்களுக்கு  பதிலாக, ஒரு ரூபாயை நீங்கள் பெற்றுக் கொண்டால் உங்களிடம் இருக்கும் தோஷத்தின் தாக்கமானது, அடுத்தவர்களுக்கு பாதிப்பைக் கொடுக்காமல் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

salt1

வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுப்பதில் தவறில்லை. எக்காரணத்தைக் கொண்டும் அந்த வெற்றிலை பாக்கோடு சேர்த்து சுண்ணாம்பு வைத்து மட்டும்தான் கொடுக்கவே கூடாது. உங்கள் கையில் இருக்கும் அதிர்ஷ்டலட்சுமி கட்டாயம் உங்களிடம் சொல்லாமலேயே சென்று விடுவாள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

vetrilai pakku

முடிந்தவரை நீங்கள் பயன்படுத்திய செருப்பை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்காதீர்கள். அடுத்தவர்கள் பயன்படுத்திய செருப்பையும், எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் சும்மா கூட போட்டு பார்க்கவே பார்க்காதீர்கள். இதன் மூலம் பல பிரச்சனைகள் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று முன்னோர்கள் சொன்னதற்கான அர்த்தங்கள் இவைதான்.

cheppal

தானம் செய்வது தவறு என்று சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் நாம் செய்யக்கூடிய தானம், எக்காரணத்தைக் கொண்டும் நம்மை பாதிக்க கூடாது. நம் வாழ்க்கையில் நாம் அதிர்ஷ்ட தோடு இருந்தால் தான், நமக்கு வருமானத்தில் குறைவில்லாமல் இருந்தால்தான், நாம் நன்றாக வாழ்ந்தால் தான், அடுத்தவர்களுக்கு நம்மால் வாழ்நாள் முழுவதும் தானம் செய்ய முடியும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களது முகம் தெய்வ கடாட்சத்துடன் இருக்க, இன்றைக்கே இந்தத் தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்! இனி உங்கள் முகத்தில் முழிப்பவர்களுக்கு கூட ராசிதான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.