பெயர் புகழ் அந்தஸ்து பதவி நல்ல வேலை கிடைக்க செல்ல வேண்டிய கோவில்

ramar4
- Advertisement -

உயிர் நம்மை விட்டு பிரியும் தருவாயிலாவது செய்த பாவங்களுக்காக வருந்தி ராமா ராமா என்ற நாமத்தை சொன்னால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். இதற்கு உண்டான அர்த்தம் என்ன தெரியுமா. வாழும்போது எவ்வளவு பாவங்களை செய்திருந்தாலும் சரி, இருக்கும் தருவாயில் சரணாகதியுடன் ராமா ராமா என்ற நாமத்தை சொல்லி ராமரின் பாதங்களில் சரணாகதி அடைந்தால் அவர் நமக்கு மோட்சத்தை கொடுப்பார் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இதிகாசத்தில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சின்ன உதாரணம். ராவணனுக்கு இரண்டு சகோதரர்கள். கும்பகர்ணன் விபீஷ்னன். இரண்டு பேருமே நல்லவர்கள் தான். அரக்க குளத்தில் பிறந்து, இவர்கள் இருவரும் தர்மத்தின் வழி பேசுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. இதில் கும்பகர்ணன் தன்னுடைய அண்ணனோடு இருந்து யுத்தத்தில் உயிரை மாய்த்துக் கொண்டான்.

- Advertisement -

ஆனால் விபீஷணனோ ராமரின் பக்கம் வந்து விட்டான். யுத்த சமயத்தில் விபீஷணன் இறுதி சமயத்தில் ராமரோடு சேரும் தருவாயில், விபீஷணனை தங்களோடு சேர்த்துக் கொள்ளலாமா என்ற ஆலோசனை நடைபெற்றது. இதில் ராமர், லட்சுமணன், ஹனுமன், சுக்ரீவர் இவர்கள் எல்லோரும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சுக்ரீவர், விபீஷணனை தங்களோடு சேர்த்துக் கொள்ள முடியாது என்று விடாப்படியாக சொல்கின்றார். ஆனால் ராமர் அனுமனிடம் ஆலோசனை கேட்கின்றார். ‘அனுமனே நீ சொல்லு, இந்த விபீஷ்னரை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமா வேணாமா?’ என்று.

- Advertisement -

ஹனுமன் ராமனை பார்த்து சொல்கிறார் ‘விபீஷ்னரை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். சீதா தேவியை காண்பதற்காக இலங்கை சென்ற போது இந்த விபீஷனருடைய நல்ல குணமானது எனக்கு தெரியும். அவர் ஒரு ராம பக்தர். அது மட்டும் இல்லாமல் விக்சனரின் மகள்தான், இலங்கையில் சீதாதேவிக்கு காவலாக இருக்கின்றாள்’. என்றவாறு அனுமன், ராமனிடம் தன்னுடைய கருத்தை சொல்லி விட்டார். இதைக் கேட்ட ராமர், விபீஷ்னரை தங்களோடு இணைத்துக் கொண்டார்.

ஆனாலும் பாருங்க சுக்ரீவர், விபீஷ்னரை நம்பவே இல்லை. கடைசி நேரத்தில் நம்மோடு சேர வந்த விபீஷ்னருக்கு நம்முடைய கூட்டணியில் இடம் கொடுக்கக் கூடாது என்று வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். அதற்குத் ராமபிரான் சொன்னது என்ன தெரியுமா ‘கடைசி நேரத்தில் வந்தாலும் சரி, என்னுடைய தாய் தந்தையை கொன்று விட்டு வந்தாலும் சரி, என்னையே கதி என்று சரணாகதியோடு வந்தவர்களுக்கு நான் இடம் கொடுப்பேன் என்று சொல்லி விபீஷ்னரை தங்களோடு இணைத்துக் கொண்டார் ராமர்.’

- Advertisement -

ராமர் தங்களுடைய பக்தர்களுக்கு கடைசி நேரத்தில் கூட கருணை காட்டும் குணம் கொண்டவர். நீங்க வாழும் போது எவ்வளவு தவறு செய்திருந்தாலும் சரி, சாமி கும்பிட்டு இருந்தாலும் சரி, சாமி கும்பிடவில்லை என்றாலும் சரி, இறக்கும் தருவாயில் ராமா ராமா என்ற நாமத்தை சொன்னீர்கள் என்றால் அந்த ராமர் கடைசி தருவாயில் கூட உங்களை ஆட்கொண்டு அந்த வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வார். இப்போது புரிகிறதா உங்களுக்கு. சரிங்க, இந்த கதைக்கும், பெயர் புகழ் பதவி அந்தஸ்து கிடைக்கக்கூடிய கோவிலுக்கும் என்ன சம்பந்தம். இருக்குதுங்க அதையும் பார்த்து விடுவோம்.

ராவணனின் சகோதரர் விபீஷனர் ராமரை வந்து சரணாகதி அடைந்த இடம் தான் இந்த கோவில். தனுஷ்கோடியில் இருக்கும் அரிசல் முனையில், கோதண்ட ராமர் கோவில் இருக்கின்றது. இந்த அரிசல்முனை கோதண்ட ராமர் கோவிலில் தான், ராமபிரான் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்ததாக வரலாறு சொல்கிறது. எல்லா இடங்களிலும் அனுமன் தானே ராமபிரானை வணங்கியபடி காட்சி தருவார்.

இந்த திருத்தளத்தில் விபீஷனர், ராமரை வணங்கியது போல காட்சியை நம்மால் காண முடிகிறது. ராமரை சரணடைந்த விவிஷ்ணனுக்கு ராஜ்ஜியம் கிடைத்த இடம் அரிசல் மூனை கோதண்டராம சுவாமி கோவில். அதேபோலதான் நாமும் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் இருக்கும், ராமரை ஒருமுறை சென்று வழிபாடு செய்து வந்தால், நம்முடைய வாழ்க்கையிலும் பதவி உயர்வு, முன்னேற்றம், நல்ல வேலை, பெரிய பெரிய பொறுப்புகள், தலைமை பதவி எல்லாம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே: சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தனுஷ்கோடி அரிசல் முனையில் இருக்கக்கூடிய இந்த ராமபிரான் கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -