சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்

pillaiyar3
- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே மாலை நேரம்தான் சிறப்பு. சந்திர பகவான் உதயமான பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி வழிபாடானது கோவில்களில் நடைபெறும். இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, சந்திர பகவான் உதிக்கும் நேரத்தில், விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த ஒரு பொருளை தானமாக வாங்கிக் கொடுத்தால், உங்கள் வாழ்க்கை இனிமையாக மாறும்.

கடன் சுமை குறையும். செல்வ வளம் பெருகும். வீண்விரய செலவு குறையும். கசப்பான உங்கள் வாழ்க்கை இனிப்பாக மாறும். இன்று மாலை நீங்கள் செய்ய வேண்டிய அந்த வழிபாடை பற்றிய தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய தானம்

நீங்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தாலும் சரி, விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, மாலை ஒரு முறை சுத்தபத்தமாக குளித்துவிட்டு வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லவும். செல்லும்போது விநாயகருக்கு உங்கள் கையால் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள். சூறை தேங்காய் உடைப்பதற்கு ஒரு தேங்காயையும் வாங்கிச் செல்லவும்.

இதோடு சேர்த்து முடிந்தவரை சுத்தமான தேன், ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு செல்லவும். விநாயகர் கோவிலில் அர்ச்சகர் இருப்பார் அல்லவா. அவரிடம் இந்த தேனை கொடுத்து விடுங்கள். அவர் அந்த தேனை விநாயகருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய இந்தத் தேன் தானம் உங்கள் வாழ்க்கையை இனிமையாக மாற்றிவிடும். சங்கடங்களை உடனடியாக தீர்க்கும்.

- Advertisement -

இந்த தானத்தை, இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் அல்ல, எந்த சங்கடஹர சதுர்த்தி அன்றும் செய்யலாம் தவறு கிடையாது. இன்று நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சங்கடம் எது. பண பிரச்சனை தானே. அந்த பண பிரச்சனை தீரவும் இந்த தானத்தை செய்யலாம். பணப்பிரச்சனை அல்லாது உங்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் கசப்பான சம்பவங்கள் இருக்குது அந்த கசப்பான சம்பவங்களை, இனிமையான சம்பவங்களாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த தேன் தானம் செய்யலாம்.

எடுத்துச் சென்ற அருகம்புல்லை விநாயகருக்கு சாத்த சொல்லிக் கொடுத்து விடுங்கள். தேங்காயை விநாயகரின் பாதங்களில் வைத்து, திரும்பவும் பெற்றுக் கொள்ளுங்கள். விநாயகர் கோவில் சித்று தேங்காய் உடைப்பதற்கு ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் உங்கள் சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று அந்த தேங்காயை சிதறு தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பவும். இன்று மாலை 6:30 மணிக்கு மேல் இந்த வழிபாடு முறைகளை மேற்கொள்ளவும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் சில பேர் வீட்டில் விநாயகர் சிலை வைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும் மறக்காமல் இன்று மாலை விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யவும். கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு இந்த தேன் அபிஷேகம் செய்யலாம். ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானால் யோகம் பெறும் ராசிகள்

வீட்டில் விநாயகர் சிலை இல்லை என்றால் விநாயகருக்கு இந்த தேன் நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்யுங்கள். வழிபாடு முடிந்தவுடன் இந்த தேனை பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். ஆன்மீக சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -