உங்கள் காலில் தொடர்ந்து காயம் ,வலி உண்டாகிறதா? இதற்கு காரணம் பாத தரிதிரமாக கூட இருக்கலாம். பாத தரிதிரம் விலகுவதற்கு இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும்

padha
- Advertisement -

ஒரு சிலர் வெளியில் சென்று வரும் பொழுது காலில் காயத்துடன் வருவார்கள். அடிக்கடி அவர்களின் கால் விரல்களில் காயம் ஏற்பட்டு விடும். லேசாக இடித்துக்கொண்டாலும் கூட ரத்தம் வருமளவிற்கு காயம் உண்டாகும். இந்த காயத்திற்கு மருந்து போட்டு அது சரியாக குணமாவதற்குள் மறுபடியும் அதே காலிலேயே அடி படும். இதைத்தான் பட்ட காலிலேயே படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது போல ஒரு சிலருக்கு கால் குடைச்சல், கால் வலி, மூட்டு வலி போன்ற தொல்லைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கு காரணம் மற்றவர்களுக்கு சுற்றி போட்ட கற்பூரம், எலுமிச்சை பழம் போன்ற தீய பொருட்களை தெரியாமல் நீங்கள் மிதித்துவிட்டால் இது போன்ற தொல்லைகள் உங்களுக்கு வந்து கொண்டிருக்கும். இவ்வாறான பாத தருகிற தொல்லைகள் தீர்வதற்கு செய்யவேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஒருசில குழந்தைகள் அடிக்கடி இரவில் கால்வலி வருவதுண்டு. இது போன்று குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை அவர்கள் தெருவில் ஓடி விளையாடும் போதோ அல்லது நடந்து செல்லும் பொழுது அவர்களுக்கு தெரியாமல் எலுமிச்சை பழத்தை மிதித்து விடுவார்கள். அல்லது தெரிந்தும் கூட கீழே கிடக்கும் எலுமிச்சை பழத்தை காலால் மிதிப்பார்கள்.

அவர்களுக்குத் தெரியாது இவை மற்றவர்களுக்கு சுற்றிப் போட்டது என்று. அவர்கள் விளையாட்டுத்தனமாக செய்யும் இந்த காரியம் அவர்களுக்கு இரவில் கால் வலியை கொடுக்கிறது. அதுபோலத் தான் பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கு சுற்றி போட்டதால் அவர்களுக்கு இருக்கும் தீய வினைகள் இருக்கும் அந்த எலுமிச்சை பழத்தையோ, கற்பூரத்தையும் மிதிக்கும் போது இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.

- Advertisement -

இவ்வாறு பாத தரித்திரன் இருப்பதை உணராமல் மருத்துவமனைக்கு அதிகமாக செலவு செய்து கொண்டிருப்பார்கள் மருத்துவமனைக்கு சென்று குணமடையாத இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் இவ்வாறு இருந்தால் இந்த தரித்திரம் விலக முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு சிறிய கரித்துண்டு மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை காலை முதல் மாலை முழுவதும் நன்றாக ஊறவைத்து விட்டு, இரவு உறங்கச் செல்லும் முன் பாதத்தை இந்த கலவையை கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்காக காலை முதல் மாலை வரை அசைவம் உண்ணக்கூடாது. அந்த ஒரு நாள் முழுவதும் சைவ உணவை மட்டும் தான் உட்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய சிறப்பு தினமாக இருப்பது ஞாயிற்றுக்கிழமை தினம் தான். அன்றைய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து வர உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பாத தரிதிரம் விலகி நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -