பில்லி, சூனியம் பிரச்சனையா? இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

sivalingam

இந்தக் கோவிலில் உள்ள மூலவர் தங்கத்தாலான சிவ லிங்கமாக, காட்சியளிக்கின்றார். ஈசன் இத்திருத்தலத்தில் மஞ்சுநாத சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். தர்ம தேவதைகளின் உதவியாளரான, அன்னப்ப சுவாமிகள் இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்கு ஒரு முக்கியம் காரணமாக திகழ்கின்றார். மஞ்சுநாதரின் சன்னிதியின் வலப்பக்கத்தில் தர்மதேவதைகளுக்கென தனியாக ஒரு சந்நிதியும், கன்னியாகுமரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

dharmasthala

இந்தக் கோவிலை ஹெக்டே குடும்பத்தினர்தான் பராமரித்து வருகின்றனர். ஹெக்டே குடும்பத்தினர் இந்த ஊரில் வரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் போல செயல்படுகின்றார்கள். பிரச்சினை என்று வரும் இருதரப்பினர்களையும் தீரவிசாரித்து நியாயம் எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கத்தில் தீர்ப்பினை அளிப்பார்கள். பிரச்சினை என்று வருபவர்கள் ஹெக்டேவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். இந்தப் பஞ்சாயத்துக்கள் மஞ்சுநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

தல வரலாறு
பல வருடங்களுக்கு முன்பு இந்த இடம் குடுமபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஊரின் தலைவராக பரமண்ணா ஹெக்டே இருந்தார். ஒரு நாள் இவரின் வீட்டிற்கு குதிரையின் மேலும், யானையின் மேலும் அமர்ந்தபடி சிலர் வந்தார்கள். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடைய ஹெக்டே, வந்தவர்களை வீட்டிற்குள் அழைத்து உபச்சாரம் செய்தார். வந்தவர்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீரையும் அளித்தார். யார் என்று தெரியாமல் அப்பண்ணாவின் வீட்டிற்குள் வந்து அமர்ந்தவர்கள், ‘நாங்கள் இந்த வீட்டிலேயே தங்கி கொள்கின்றோம். நீங்கள் வேறு இடத்திற்கு சென்று விடுங்கள் என்று  ஹெக்டேவிடம் கூறினார்கள்’. எந்தவித மறுப்பும் தெரிவிக்காத ஹெக்டே தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியேற தயாராகி விட்டார்.ஹெக்டேவின் இந்த செயலை பார்த்தவர்கள் தாங்கள் யார் என்று கூறினார்கள். ‘நாங்கள் ஈசனின் ஆணைப்படி உங்களின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட தர்மதேவதைகள். இந்த குடுமபுரம் பிற்காலத்தில் ஒரு புண்ணியக் கோவிலாக மாறப்போகிறது. அந்தக் கோவிலை நீங்கள் தான் கட்டி பராமரித்து, வழிநடத்தி செல்லப்போகிறீர்கள். அதற்கான பரீட்சைதான் உங்களுக்கு நடத்தப்பட்டது. எந்தவித தன்னலமில்லாத உங்களின் குணத்தை பரிசோதிக்கத்தான் இந்த நாடகம். நீங்கள் கட்டப்போகும் இந்த கோவிலில் கன்னியாகுமரி அம்மனையும், மஞ்சு நாதரையும், தர்மதேவதை சிலையையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எல்லாவிதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மகிழ்ச்சியில் பக்தர்கள் அதிகமான காணிக்கையை செலுத்துவார்கள். அந்தத் தொகையை வைத்துக்கொண்டு நீங்கள் தர்ம காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் அந்த ஈசன் பார்த்துக்கொள்வான் என்று கூறி தேவதைகள் மறைந்து விட்டனர்.’

dharmasthala

தர்ம தேவதைகளின் வாக்குப்படி ஹெக்டேவும் நடந்து கொண்டார். கோவிலில் இருந்து பெறப்பட்ட காணிக்கைகளை வைத்து பல தர்ம காரியங்களை செய்து வந்தார். இதனால் இந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது.  ஹெக்டேவுக்கு அடுத்த தலைமுறையில் வந்த சந்ததியினர் இந்த தர்ம காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த ஊரில் உள்ளவர்களும் ஹெக்டேவின்  குடும்பத்திற்கு தொடர்ந்து மரியாதை அளித்து வருகின்றனர்.

- Advertisement -

dharmasthala

பலன்கள்
மனநிலை சரியில்லாதவர்கள், பில்லி, சூனியம் போன்றவற்றில் சிக்கி தவிப்பவர்கள். பேய், பிசாசு பிடித்தவர்கள் இந்த கோவிலில் ஒரு வாரம் தங்கியிருந்து வழிபட்டு சென்றால் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் வழக்கு பிரச்சனைகள் இந்த மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு வந்து சென்ற பின் ஒரு முடிவுக்கு வரும்.

தரிசன நேரம்:
காலை 5.30AM – 12.00PM
மாலை 4.00PM – 9.00PM

முகவரி:
அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா,
பெல்தங்கடி தாலுக்கா,
தெட்சிண கன்னடா மாவட்டம்
மங்களூர் அருகில்,
கர்நாடகா-574-216.
தொலைபேசி எண்
+91 8256 277121, 277141.

இதையும் படிக்கலாமே
சாமுண்டீஸ்வரி கோவில் வரலாறு

English Overview:
Here we have Dharmasthala temple history in Tamil. Dharmasthala temple timings. Dharmasthala temple details. Dharmasthala kovil varalaru.