வீட்டில் தினந்தோறும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுபவர்களாக நீங்கள்? அப்படியானால் இதை நீங்கள் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

mahalashmi vilaku
- Advertisement -

எந்த ஒரு வீட்டில் காலை மாலை இருவேளையும் தீபம் எரிகிறதோ அந்த வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த தீபமுறையை பின்பற்றி வந்தார்கள். இன்றைய காலக்கட்டத்திலும் பலரும் இதை செய்கிறார்கள் அப்படி செய்பவர்கள் இந்த சின்ன சின்ன தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், அவர்கள் சகல ஐஸ்வர்யத்தையும் பெறலாம். அந்த தகவல்களை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும் முறை:
எந்த தீபமாக இருந்தாலும் அந்த தீபத்தின் சுடரானது கிழக்கு முகமாக இருந்தால் மிக மிக நல்லது. கிழக்கு முகமாக தீபம் எரியும் வீட்டில் லட்சுமி கடாட்சம் என்றென்றைக்கும் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் நாம் ஏற்றும் இந்த தீபத்தின் சுடர் ஆனது தெய்வத்தின் மீது பட்டு மறைக்கக் கூடாது. சுட தெய்வத்திற்கு முன்பாக இருக்க வேண்டுமே தவிர தீபத்தின் நிழல் தெய்வங்களை மறைத்து விடக் கூடாது. இதற்கு தகுந்தவாறு உங்கள் வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு வைத்து தீபம் ஏற்றுங்கள்.

காமாட்சி அம்மன் தீப சுடர் கிழக்கு முகமாக இருப்பதை போல் இன்னொரு விளக்கு வடக்கு பார்த்து இருப்பதைப் போல் ஏற்றி வைப்பது மேலும் ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொடுக்கும் என்பதும், அந்த இடத்தில் பண வரவை தடையில்லாமல் பெருக செய்யும் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கு சற்று பெரியதாக இருப்பதால் அதை சுற்றும் செய்து ஏற்றுவது கடினம் என்று நினைத்து பலரும் அப்படியே ஏற்றுகிறார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது எந்த அளவிற்கு காமாட்சி அம்மன் விளக்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து விளக்கு ஏற்றுகிறோமோ அந்த அளவிற்கு தெய்வ அனுகிரகம் வீட்டில் நிறைந்திருக்கும். உங்களால் விளக்கை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது போனாலும் ஒரு முறை ஏற்றிய திரியாவது மறுமுறை மாற்றி ஏற்றுவது நல்லது.

விளக்கை ஏற்றும் போது நேரடியாக நாம் தீப்பெட்டி கொண்டு ஏற்றக்கூடாது. முதலில் ஊதுபத்தியை பற்ற வைத்து அதில் இருக்கும் சுடரில் பற்ற வைக்கலாம். அல்லது ஒரு அகல் விளக்கை ஏற்றி அதன் மூலம் விளக்கை பற்ற வைக்கலாம். இப்படி ஏற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் வெளியேறும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் தீப்பெட்டியை நேரடியாக நல்லதிற்கும் ஏற்றுவார்கள், கெட்டதுக்கும் ஏற்றுவார்கள் எனவே நேரடியாக இப்படி தீபம் ஏற்றாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

நாம் தினமும் ஏற்றும் இந்த காமாட்சி அம்மனின் விளக்கிற்கு நல்லெண்ணெய், நெய் இரண்டை கொண்டு ஏற்றினால் மிக மிக விசேஷம். அப்படியே ஏற்றும் எண்ணெயில் கொஞ்சம் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் மூன்றையும் நன்றாக தூள் செய்து அந்த தூளில் இருந்து ஒரு சிட்டிகை மட்டும் இந்த எண்ணெயில் கலந்து ஏற்றினால் போதும் மகாலட்சுமி தாயார் சகல ஐஸ்வர்யத்தையும் உங்களுக்கு வாரி வழங்குவார் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இனி வாழ்நாளில் கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற பயமே இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் செய்து விடுங்கள்.

தினமும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுபவர்கள் இந்த முறைகளை பின்பற்றி ஏற்றும் போது அவர்கள் மேலும் மேலும் ஐஸ்வர்யத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என்ற தகவலை இந்த பதிவில் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த குறிப்புகளை நீங்களும் பின்பற்றி நல்ல முறையில் வாழுங்கள்.

- Advertisement -