தீபாவளி 2023 வழிபடும் முறையும் நேரமும்

dheepavalli oil dheepam
- Advertisement -

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி என்று சொல்லலாம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தோஷமாக எதிர்பார்க்கக் கூடிய ஒரு நன்னாள் என்றால் அது இது தான். இத்தகைய தீபாவளி திருநாள் இந்த வருடம் 12.11. 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் கொண்டாட உள்ளோம். அன்றைய நாளில் நாம் கங்கா ஸ்தானம் செய்யும் முறையும் தீபாவளி வழிபாட்டு முறையும் எப்படி செய்ய வேண்டும். எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

தீபாவளி கங்கா ஸ்தானம் செய்யும் முறை

தீபாவளி தோன்றியதற்கு பல புராணக் கதைகள் உள்ளது. ஒரு புறம் ராமர் தன்னுடைய வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பும் நாளை இந்த தீபாவளி நாளாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இன்னொரு புறம் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த இந்த நாள் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. எப்படியாக இருப்பினும் தீபாவளி என்பது நாம் மகிழ்ச்சியாக கொண்டாட கூடிய ஒரு நாள்.

- Advertisement -

இந்த நாளில் நாம் கங்கா ஸ்தானம் செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களிலும் ஒவ்வொரு தெய்வங்களும் வாசம் செய்து அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சிவபெருமான் அருள் புரிந்துள்ளார். அதில் நாம் பயன்படுத்தும் நல்லெண்ணையில் மகாலட்சுமி தாயார், அரப்பு எனப்படும் சீயக்காயில் சரஸ்வதி தாயார், வெந்நீரில் கங்கா தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரி மாதாவும் வாசம் செய்கிறார்கள்.

மலர்களில் யோகியர்களும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும், இனிப்பில் அமிர்தமும் அன்று தயாரிக்கப்படும் லேகியத்தில் தன்வந்திரி பகவானும் வாசம் செய்கிறார்கள். தீப ஒளியில் பரமாத்மாவும் பட்டாசு ஒளியில் நம்முடைய ஜீவாத்மாவும் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு.

- Advertisement -

இந்த நாளில் மற்ற நாட்களைப் போல் அல்லாது மிக சீக்கிரமாக அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு முன்பாகவே இந்த கங்கா ஸ்தானத்தை நாம் துவங்கி விட வேண்டும். கங்கா ஸ்நானம் செய்ய சரியான நேரம் காலை 3 மணியில் இருந்து 5 மணி நேரம். இவற்றை நம் வீட்டில் உள்ள வயதில் மூத்தவர்கள் இளையவர்களை வரிசையாக அமர வைத்து நல்லெண்ணெய் சீயக்காய் வைத்த பிறகு வெந்நீரில் நீராட வேண்டும்.

இந்த கங்கா ஸ்தானம் முடிந்த பிறகு புத்தாடை அணிபவர்கள் அணிந்து கொள்ளலாம். பலருக்கும் புத்தாடைகளை வைத்து வணங்கிய பிறகு உடுக்கும் வழக்கம் உள்ளது. அப்படியானவர்கள் பூஜை முடித்த பிறகு புத்தாடைகளை உடுத்திக் கொள்ளலாம். இப்போது பூஜைக்கான முறைகளை பற்றியும் பார்த்து விடலாம்.

- Advertisement -

கங்கா ஸ்தானம் முடிந்த பிறகு வீட்டின் பூஜை அறையில் உங்களால் எத்தனை தீபங்கள் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்களை ஏற்றுங்கள். இந்த பண்டிகைகளுக்கு பெயரே தீப திருநாள் தான். தீபங்கள் ஓளியில் தான் நாம் இறைவனான பரமாத்மாவை காண முடியும். ஆகையால் தீபங்களை நிறையவே ஏற்றுங்கள். அதில் ஒரே ஒரு நெய் தீபத்தை மட்டும் ஏற்ற மறக்காதீர்கள்.

அடுத்து நீங்கள் தீபாவளிக்கு செய்து வைத்த பலகாரங்கள் அனைத்தையும் இலையில் வைக்க வேண்டும். இதில் நீங்கள் எவ்வளவு பலகாரங்களை செய்து நிறைவாக வைக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. இதை நீங்களே செய்தாலும் சரி கடையில் வாங்கி வைத்தாலும் சரி. இத்துடன் புத்தாடை வைத்து வணங்குபவர்கள் அந்த துணிகளையும் வைக்கலாம். பட்டாசுகளை சாஸ்திரத்திற்கு கொஞ்சம் வையுங்கள். இந்த வழிபாட்டை எல்லாம் சூரிய உதயத்திற்கு முன்பாக செய்து விட வேண்டும்.

ஒரு வேளை எங்களால் இந்த நேரத்தில் செய்ய முடியாது என்பவர்கள் மதியத்திற்குள் நல்ல நேரம் பார்த்து வணங்கலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு முன் இந்த வழிபாட்டை முடிப்பது தான் சரியான முறை. இவ்வளவு சீக்கிரத்தில் எழுந்து செய்ய வேண்டுமா? என யோசிக்கலாம். நன்றாக உறங்க நமக்கு பல நாட்கள் உள்ளது. ஆனால் இது போன்ற வழிபாடு செய்ய இது போல ஒரு சில நாட்கள் தான் உள்ளது. அதை தவற விடாமல் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்

இவையெல்லாம் செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சிறியவர்கள் ஆசிர்வாதம் வாங்கி புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளி திருநாளை கொண்டாடலாம். இன்றைய நாளில் உங்களால் முடிந்த வரையில் யாரேனும் ஒருவருக்காவது புத்தாடை வாங்கி கொடுத்து அவர்களும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட உதவி செய்யுங்கள். இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நீங்களும் படித்து பயன் பெறலாம்.

- Advertisement -