- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொருட்களில் தெய்வ அம்சம்

பொருட்களில் தெய்வ அம்சம்

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் தெய்வ கடாட்சம் நிரம்பியுள்ளதாக நம் முன்னோர்கள் கூற கேட்டிருப்போம். அதிலும் சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வங்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. அதன்படி அந்த பொருட்களை எல்லாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். சுத்தமில்லாமல் இந்த பொருட்களை எல்லாம் வைத்திருந்தால் கடன், தரித்திரம், வறுமை எல்லாமே நம்மை தேடி வந்துவிடுமாம். அப்படியான பொருட்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

தெய்வ கடாட்சம் நிரம்பியுள்ள பொருட்களில் மிக முக்கியமானது சமையலறையில் இருக்கும் தண்ணீர் பானை! தண்ணீர் பானையில் குலதெய்வ வாசம் நிறைந்திருக்கிறது. நம் வீட்டு நிலை வாசலில் இருக்கும் தெய்வம் குலதெய்வம். அதுபோல இந்த தண்ணீர் பானையிலும் குலதெய்வம் உண்டு. இது எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் பானையை கழுவாமல் வைத்திருந்தால் குலதெய்வ சாபம் உண்டாகும், கடன் நேரும்.

- Advertisement -

பாற்கடலில் பிறந்த மகாலட்சுமி உப்பில் வாசம் செய்கிறார். உப்பு ஜாடி எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அஞ்சரை பெட்டியில் அன்னலட்சுமி வாசம் செய்கிறார். வறுமை இல்லாத சுகபோக வாழ்க்கைக்கு ஒருவருடைய சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி எப்பொழுதும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்பார்கள். அது இந்த அஞ்சறைப்பெட்டிக்கு தான் பொருந்தும்.

இந்த பொருட்களை எல்லாம் நாம் சுத்தமாக தான் வைத்திருக்கிறோமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்! அடுத்ததாக ஊறுகாய் பாட்டிலில் குபேர வாசம் உண்டு. ஊறுகாய் பிரியராக இருக்கக்கூடிய குபேரர் எப்பொழுதும் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஊறுகாயில் நிறைந்து காணப்படுகிறார் எனவே எப்பொழுதும் வீட்டில் ஊறுகாய் இருந்தால் செல்வ வளம் அதிகரிக்கும். அது போல ஊறுகாய் பாட்டிலையும் சுத்தம் செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

நம் முன்னோர்கள் அரிசி வைத்திருக்கும் கலனை எப்பொழுதும் தெய்வமாக போற்றி மதிப்பது உண்டு. இந்த அரிசியில் மகாவிஷ்ணு மற்றும் சிவன் வாசம் செய்கிறார்கள். மஞ்சள் வைத்திருக்கும் பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும். மஞ்சளில் அம்பிகை வாசம் செய்கிறார். அம்பாள் வாசம் செய்யும் இந்த மஞ்சள் எப்பொழுதும் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும், குறையக்கூடாது.

வட இந்தியாவில் பெருமளவு பயன்படுத்தப்படும் கோதுமையில் சூரிய பகவான் வாசம் செய்கிறார். நம் வீட்டில் ஒளி வீச, வசந்தமுடன் இருக்க எப்பொழுதும் கோதுமையை வைத்திருக்க வேண்டும். கோதுமையில் சூரிய பகவான் இருப்பதால் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல துவரம் பருப்பில் செவ்வாய் பகவான் இருக்கிறார். பச்சை பயரில் புதன் பகவான் இருக்கிறார். உளுத்தம் பருப்பில் ராகு பகவானும், கொள்ளு கேது பகவானுக்கு உரியதாகவும் இருக்கிறது. பாலில் சந்திரனும், கொண்டைக்கடலையில் குரு பகவானும், எள்ளு மற்றும் நல்லெண்ணையில் சனி பகவானும் நிறைந்து இருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு தரும் முருகர் பாடல்

இப்படி நம் சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு தெய்வாம்சம் பொருந்தி இருக்கிறது. மேற்கூறிய எல்லா பொருட்களும் எப்பொழுதும் நம் வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள்! இதில் ஒரு பொருள் இல்லை என்றாலும், அதனை வாங்கி வைத்து இனி உங்கள் உணவில் ஒன்றாக மாற்றுங்கள். இந்த ஒவ்வொரு பொருட்களையும், அந்த பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரங்களையும் எப்பொழுதும் சுத்தமாக கழுவி வையுங்கள். இப்படி வீட்டை வைத்திருந்தாலே கடன் வராது, வறுமை ஏற்படாது, தரித்திரமும் பிடிக்காது என்பது நியதி.

சற்று முன்