அழகன் முருகனுடைய மாயாஜால வித்தை யாருக்குமே புரியாது. அதல பாதாளத்தில் விழுந்திருப்பவனை தூக்கி கோபுரத்தில் உட்கார வைத்து விடுவான். கோபுரத்தில் உட்காந்து தலைகனத்தோடு ஆடிக்கொண்டிருந்தால், உடனடியாக அதல பாதாளத்தில் தள்ளி விடுவான். கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்கு அனுபவப் பாடத்தை கற்றுத் தரும் கடவுள் இவன். முருகனுடைய விளையாட்டே விளையாட்டு தான்.
இந்த அழகன் முருகனை நம்பிக்கையோடு உண்மையான பக்தியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு ஏமாற்றம் என்பது வாழ்க்கையில் இருக்காது. உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் பெரிய பெரிய கனவுகளை நினைவாக்க போராடிக் கொண்டிருக்கிறீர்களா. அதிலும் குறிப்பாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக மட்டும்.
இன்று வளர்பிறை சஷ்டி திதி இருக்கிறது. வியாழக்கிழமையோடு இந்த நாள் சேர்ந்து வந்திருக்கிறது, இந்த வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது, குபேரருக்கு உரியது. இந்த நாளில் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வணங்கினால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிச்சயம் தீரும். வீடு கட்டுவதற்கு கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை, நிலம் வாங்குவதற்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால் மனது நிறைய ஆசை இருக்கிறது. இன்று பூஜை அறைக்கு சென்று, முருகனை வணங்கி “ஓம் சிறுவாபுரி முருகனே துணை” என்ற வார்த்தையை சொல்லுங்கள். பிறகு இந்த பாடலை ஒரே ஒரு முறை படியுங்கள். இன்று இரவு 9 மணிக்கு முன்பு இந்த பதிவை நீங்கள் பார்க்கலாம், இந்த பதிவோடு சேர்த்து, இந்த பாடலை படித்து விட்டால், முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகத்தை கொடுத்து விட்டான் என்று அர்த்தம். இன்று நீங்கள் படிக்க வேண்டிய பாடல் வரிகள் இதோ.
அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி சிறுவாபுரி முருகப்பெருமானை வழிபாடு செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. இப்பேற்பட்ட முருகனை இன்றைய தினத்தில் மனதில் நினைத்து இந்த பாடலை படிக்க நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும். இன்றைய தினம் இந்தப் பாடலை படித்தால் உங்களுக்கு வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் உடையும். பாதியிலேயே வீடு கட்டியிருந்தால் அந்த வீட்டை முழுமையாக, கட்டி முடிக்க இந்த வழிபாடு உதவும்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் வளர்பிறை சஷ்டி தீபம்
வீடு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தாலும் சரி இந்த பாடலை நீங்கள் படிக்கலாம் கை மேல் பலன் உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயம் கூடிய விரைவில் சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என்ற தகவல் உடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.