கடவுளுக்கு வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

temple-prayer

நமக்கு எந்த ஒரு விஷயம் தேவை என்றாலும் உடனே இறைவனிடத்தில் பிரார்த்தனையாக வைத்து விடுவது உண்டு. இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பொழுது இந்த விஷயம் நடந்தால் இதை செய்கிறேன் என்கிற வேண்டுதலை கூறுவது உண்டு. அப்படி ஒரு விஷயத்தை நாம் செய்து விடுகிறேன் என்று இறைவனிடம் சொல்லும் பொழுது அதை தவறாமல் செய்து விட வேண்டும். இல்லை என்றால் தெய்வ குற்றமாகி விடும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் நாம் என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

praying god

எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதலை கட்டாயம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி விட வேண்டும். செலுத்த வேண்டிய காணிக்கைகளை சரியாக செலுத்தி விட்டால் நமக்கு பிரச்சனை ஒன்றுமில்லை. மேலும் யோகமான காலமும் அமையும். அதுவே செலுத்த முடியாமல் தள்ளி சென்று கொண்டே இருந்தால் அதற்கும் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்து விட வேண்டும். ஒரு விஷயம் நம்மால் செய்ய முடியவில்லை என்றால் அங்கு எந்த வகையில் தடை ஏற்படுகிறது? என்பதை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் அதுவே அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கும் காரணமாக அமையும்.

உதாரணத்திற்கு குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தி, காது குத்த குறிப்பிட்ட காலம் உண்டு. ஆனால் ஒருமுறை தள்ளி சென்றால் மீண்டும் முடி காணிக்கை செலுத்த முடியாமலேயே செய்து விடுவார் இறைவன். அங்கு தெய்வ குற்றம் இருக்கிறது என்பது அர்த்தமாகிறது. ஒற்றைப் படையில் முடி காணிக்கை கொடுக்க வேண்டும்.

kadhu kuthu

ஆனால் இரட்டைப் படையில் அந்த காணிக்கையை செலுத்தக்கூடிய எல்லா வசதிகளும் நம்மிடம் இருக்கும் ஆனால் ஒற்றைப்படை வரும் பொழுது கோவிலுக்கு போக முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு சூழ்நிலை தடை போடும். முடி காணிக்கை மட்டுமல்ல எந்த காணிக்கையை நீங்கள் செலுத்த நினைத்தாலும் இது போன்ற தடை ஏற்படும் பொழுது நாம் வீட்டில் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். அதாவது வீட்டில் நீங்கள் வேண்டிக் கொண்ட தெய்வத்தினுடைய படத்தை வைத்து சந்தன, குங்குமம் இட்டு மலரால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வெள்ளை துணியில் மஞ்சள் தோய்த்து காய வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, பின்னர் அதில் சிறிதளவு பச்சரிசி சேர்த்து முடிந்து கொள்ள வேண்டும். இதை பூஜை அறையில் வைத்து நான் வேண்டிய வேண்டுதலை குறிப்பிட்ட காலத்திற்குள் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் நிச்சயம் செலுத்த வேண்டிய காணிக்கைகளையும், செய்ய வேண்டிய பரிகாரத்தையும் செய்து விடுவேன் என்று மனதார வேண்டிக் கொண்டு நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.

neideepam

இப்படி செய்யும் பொழுது நீங்கள் தவறவிட்ட குலதெய்வ பிரார்த்தனைகள் அல்லது இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அதனால் உங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது பாதுகாக்கும். உங்களால் எப்பொழுது முடியுமோ அப்போது தவறாமல் அந்த பரிகாரங்களை, வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். அப்படி நீங்கள் காணிக்கை செலுத்தும் பொழுது இந்த முடிந்து வைத்த ஒரு ரூபாய் முடிப்பையும் சேர்த்து போட்டு விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது தான் தன, தானியத்திற்கு எப்பொழுதும் குறைவில்லாமல் நிறைவான வாழ்க்கை அமையும்.