இந்த அறிகுறிகள் வீட்டில் இருந்தாலே போதுமே! நிச்சயமாக தெய்வங்கள் உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக தான் அர்த்தம்.

god-archanai

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பல பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகம் இது. நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தான்! எந்த வீடு சுத்தமாக இருக்கிறதோ, எந்த வீட்டில் அழுக்கு துணியின் வாடை வீசாமல் இருக்கின்றதோ, எந்த வீட்டில் துடைப்பமும் குப்பை கூடையில் கூட கெட்டவாடை வீசாமல் இருக்கின்றதோ, எந்த வீட்டில் குளியல் அறையும் சமையலறையும் எப்போதுமே ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தெய்வசக்தி குடிகொள்ளும் என்பதில் சந்தேகமே கிடையாது.

kuruvi

சரி, மேல் சொன்ன விஷயங்களை தவிர்த்து வேறு எந்தெந்த விஷயங்களை வைத்து நம் வீட்டில் தெய்வங்கள் குடி கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்வது? வாயில்லா ஜீவன்கள் உங்கள் வீடு தேடி வருகிறது என்றால் உங்களுடைய வீட்டில் தெய்வங்கள் குடி கொண்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

நாய் வாலை ஆட்டிக்கொண்டு உணவு தேடி உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும். உங்கள் வீட்டு மொட்டை மாடியில், ஜன்னல் பகுதிகளில், பின்பக்கம் இருந்தால் புழக்கடையில் காகம் வந்து சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கும். வீட்டில் பல்லிகளின் நடமாட்டம் இருக்கும். ஈ எறும்புகள் வீட்டில் வரும்.

kolavi

குளவி கூடு கட்ட வீடு தேடி ஆங்காங்கே பறந்து கொண்டிருக்கும். கருவண்டு கிடையாது. சிவப்பு குளவிகள் உங்கள் வீட்டு நிழல் பகுதியை தேடி வந்து கூடு கட்டத் தொடங்கும். உங்கள் வீட்டைக் கடந்து செல்லும் சிட்டுக்குருவிகள் புறாக்கள் சில பறவைகள் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமரும். குறிப்பாக சிட்டுக்குருவிகள் உங்கள் வீட்டைத் தேடி வரும்.

- Advertisement -

பறவைகளின் வருகை வீட்டில் இருந்தால் அது மிக மிக நல்லது. அப்படி உங்களுடைய வீடு பறவைகள் வருகை தருவதற்கு ஏதுவாக அமையவில்லை என்றால் அதாவது அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் ஆக இருந்தால், பறவை உங்கள் வீட்டை தேடி வரவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்.

ஒருவருடைய வீட்டில் பல்லியின் நடமாட்டம் இருந்தாலே போதும். அந்த வீட்டில் கெட்ட சக்தி எதுவும் இல்லை. நல்ல சக்தி தான் குடி கொண்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அந்தப் பல்லிகள் சத்தம் போட்டாலும் பிரச்சனை கிடையாது. சத்தம் போடவில்லை என்றாலும் பிரச்சனை கிடையாது. அதை நினைத்து யாரும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. கண்களில் பார்க்கும் போது ஆங்காங்கே பல்லிகள் இருந்தாலே போதும்.

dog1

நம்முடைய வீட்டைத் தேடி வாயில்லா ஜீவராசிகள் வரவில்லை என்றாலும் அதை நம் வீடு தேடி வரும்படி, பழகி வைத்துக்கொள்ள வேண்டும். வீதிகளில் இருக்கும் நாய் பூனை இவைகளுக்கு சாப்பாடு வைத்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மொட்டை மாடியில் வரும் பறவைகளுக்கு தண்ணீர் உணவினை வைத்து நம் மொட்டைமாடிக்கு வரும்படி பழக வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு, நமக்கு வரப்போகும் கெடுதலை முன்கூட்டியே அறியக்கூடிய தன்மை நிறையவே இருக்கின்றது.

bird-in-hand

வாயில்லா ஜீவன்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொண்டு, விசுவாசமுள்ள முதலாளிகளாக மாறி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துகளை கூட அது முன்கூட்டியே வெளிப்படுத்தும். முயற்சி செய்து பாருங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.