வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு

murugan valipadu
- Advertisement -

கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் திருவடிகளில் சரணாகதி அடைந்தோரின் வாழ்க்கையில் எந்தவித தடைகளோ, தாமதங்களோ, கஷ்டங்களோ ஏற்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் எந்த முறையில் வழிபட்டோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமாக முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வோம். கடன் தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, வீடு வாங்க, வீட்டை கட்ட, புதிய இடம் வாங்க, வண்டி வாகன யோகம் ஏற்பட, வேலை கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க என்று பல வேண்டுதலுக்காக பல வழிமுறைகளை பின்பற்றி முருகப்பெருமானை நாம் வழிபடுவோம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று தான் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலை முன் வைத்து தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அருகில் இருக்கக்கூடிய வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு முன்பாக ஒரு சிறிய வெள்ளை நிற பேப்பரில் கருப்பு மையைத் தவிர்த்து பிற பேனாக்களில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை எழுதிக் கொள்ளுங்கள்.

பிறகு அந்த பேப்பரை நான்காக மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வீட்டிலேயே செவ்வரளி பூக்களை வாங்கி வந்து மாலையாக தொடுத்துக் கொள்ளுங்கள். இயலாத பட்சத்தில் கடையில் இருந்து மாலையாக வாங்கிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த செவ்வரளி மாலையையும் நம்முடைய வேண்டுதல் சீட்டையும் எடுத்துக்கொண்டு முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். முருகப்பெருமானுக்கு இந்த செவ்வரளி மாலையை கொடுத்துவிட்டு முருகப்பெருமானை எட்டு முறை வலம் வரவேண்டும். நிறுத்தி நிதானமாக பொறுமையாக வலம் வரவேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வலம் வரும்போது “ஓம் நமோ சரவணபவ” என்னும் மந்திரத்தை மட்டும் உச்சரிக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது. எட்டு முறை வலம் வந்த பிறகு ஒன்பதாவது முறை அடிப்பிரதட்சணம் செய்ய வேண்டும். அடிப்பிரதட்சணம் செய்து முடித்த பிறகு நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை முழு மனதோடு முருகப்பெருமானிடம் கூற வேண்டும். கோவிலை வலம் வரும்பொழுது நாம் எழுதி வைத்திருக்கும் அந்த வேண்டுதல் சீட்டு நம் கையில் இருக்க வேண்டும். இப்படி வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைத்து, வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.

வீட்டிற்கு வந்து இந்த வேண்டுதல் சீட்டை முருகனின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இதனுடன் உங்களால் இயன்ற ஏதாவது ஒரு காணிக்கையையும் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்பது வாரங்கள் இதே முறையில் வழிபாடு செய்யுங்கள். ஒன்பதாவது வாரம் செவ்வரளி பூவிற்கு பதிலாக ரோஜா பூ மாலை மூன்று வாங்கிக் கொள்ள வேண்டும். முருகன், வள்ளி, தெய்வானை என்று மூன்று பேருக்கும் மூன்று ரோஜா மாலையை வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனை செட்டு ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒன்பதாவது வாரம் கோவிலுக்கு சென்று எட்டு முறை வலம் வந்து ஒன்பதாவது முறை அடி பிரதட்சணம் செய்து முடித்த பிறகு மூலஸ்தானத்திற்கு சென்று ரோஜாப்பூ மாலையை வள்ளி தெய்வானை சம்மதம் முருகனுக்கு சாற்றி விட்டு உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயர்களையும் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதல் சீட்டை கோவிலில் இருக்கும் குளத்தில் போட்டு விட வேண்டும். குளமில்லாத பட்சத்தில் தல விருட்சத்தில் கட்டி விட வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் சந்திர தரிசனம்

முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய வேண்டுதல் கண்டிப்பான முறையில் ஒன்பது வாரத்தில் பூர்த்தி அடைந்து விடும் என்பது உறுதி.

- Advertisement -