நினைத்தது நிறைவேற விநாயகர் வழிபாடு

vinayagar deepa valipadu
- Advertisement -

முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமான் மிகவும் எளிமையான கடவுளாக கருதப்படுகிறார். எளிமையான முறையில் வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான கடவுளாகவும் இவர் விளங்குகிறார். விநாயகப்பெருமானை காரிய வெற்றி ஏற்படுவதற்காக வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக விநாயகப்பெருமானை சங்கடஹார சதுர்த்தியில் வழிபாடு செய்வோம். இப்படிப்பட்ட விநாயகப்பெருமானை எந்த முறையில் நாம் வழிபாடு செய்தால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் அவருக்கு இருக்க வேண்டும். இந்த ஆற்றலை பெறுவதற்கு விடாமுயற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு கடவுளின் அருளும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஒரு காரியத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்னும் பட்சத்தில் அதை எப்படி எல்லாம் செய்தால் வெற்றி அடையும் என்று யோசித்து செயல்பட ஆரம்பிக்கும்போழுதே விநாயகப்பெருமானையும் தொடர்ந்து நாம் வழிப்பட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் விநாயகப்பெருமானின் அருளாலும் நம்முடைய முயற்சியாலும் அந்த காரியத்தில் நமக்கு வெற்றி ஏற்படும். அந்த வழிபாட்டை பற்றிதான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒரு காரியத்தை நாம் செய்ய ஆரம்பிக்கிறோம், அந்த காரியத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படுகிறது, அந்த காரியத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனில் அப்படி நல்ல காரியமாக இருக்கும் பட்சத்தில் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுதே இந்த வழிபாட்டையும் நாம் ஆரம்பித்து விட வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் படத்தையோ அல்லது சிலையையோ சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக 2 ஏலக்காயை வைத்து சுத்தமான ஒரு டம்ளரில் குடிக்கும் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அவருக்கு ஒரு அகலில் நெய் ஊற்றி பஞ்சுத் திரியுடன் வெட்டிவேரை பஞ்சுத்திரியுடன் திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு உகந்த வெள்ளருக்கம்பூ கிடைக்கும் பட்சத்தில் அந்த பூவை வைத்து விநாயகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அடுத்ததாக கையில் ஒரு அருகம்புல்லை வைத்துவிட்டு விநாயகப்பெருமானுக்கு முன்பாக அவரின் மூல மந்திரத்தையோ அல்லது காயத்ரி மந்திரத்தையோ 11 முறை உச்சரித்துவிட்டு இந்த அருகம்புல்லை அவருடைய பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

- Advertisement -

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு அருகம்புல்லை சட்டை உள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஏலக்காயில் ஒரு ஏலக்காயை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்ப வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் விநாயகர் பெருமானை வழிபாடு செய்து நாம் மேற்கொள்ளும் முயற்சி கண்டிப்பாக முறையில் வெற்றியைத் தரும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு

மிகவும் எளிமையான தெய்வமாக கருதப்படும் விநாயகப் பெருமானை முழு மனதுடன் நம்பி இந்த எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றினால் நாம் நினைத்தது நடக்கும்.

- Advertisement -