பூஜை அறையில் இந்த 1 வார்த்தையை எழுதி வைத்தால் போதும். தெய்வங்கள் உங்கள் பூஜை அறையில் வந்து விரும்பி அமர்ந்து கொள்ளும்.

poojai
- Advertisement -

நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும். நம்மை பார்த்து யாரும் பொறாமை படக்கூடாது. நாம் மட்டும் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட, நம்மை போல் மற்றவர்களும் சந்தோஷமாக வாழ வேண்டும். நாமும் மற்றவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது. நாமும் அடுத்தவர்கள் குடும்பத்தைப் பார்த்து வயிற்றெரிச்சல் படக்கூடாது, என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய குடும்பத்திற்கும் நல்லது நடக்கும். நல்லது என்பது நமக்கு மட்டும் சொந்தமான விஷயம் அல்ல. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் சொந்தமான விஷயம். ஆகவே நல்லதையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு மட்டும் சொந்தம் ஆக்கிக் கொள்ள பாக்காதீங்க.

ஆகவே, அனைவருக்கும் சந்தோஷம் கிடைக்க வேண்டும், அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திக் கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடங்குவோம். தெய்வங்கள் வீட்டில் நிலையாக குடியிருக்க நாம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நாம் முதலில் ஒரு பொடியை, நம் கையாலேயே தயார் செய்ய வேண்டும்.

- Advertisement -

தெய்வ கடாட்சம் நிறைந்த பூஜை பொடி தயார் செய்வது எப்படி?
இந்த பொடியை தயார் செய்ய பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜவ்வாது, கிராம்பு, பட்டை, வெட்டிவேர், மஞ்சள் தூள், சந்தன பொடி, ரோஜா இதழ் பொடி, சோம்பு, இந்த பத்து பொருட்கள் நமக்கு தேவைப்படும். இது அல்லாது பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய வாசம் நிறைந்த பொருட்கள் உங்களுக்கு வேறு ஏதாவது தெரியும் என்றால் அதையும் இந்த பொருளோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அளவு உங்களுடைய விருப்பம் தான். பொடியாக கிடைப்பதை எல்லாம் பொடியாக வாங்கி கலந்து கொள்ளுங்கள். பொடி கிடைக்காத பட்சத்தில் முழு பொருட்களை வாங்கி அரைத்து சலித்து எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்தால் தெய்வ நறுமணம் வீசக்கூடிய ஒரு பொடி தயார். இதை பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த பொடியை எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இந்த பொடியை சிறிய கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி குழைத்து நிலை வாசலில் இரண்டு பக்கமும் தீட்டி இதன் மேலே குங்குமப்பொட்டு வைக்கலாம். வாசம் நிறைந்த இந்த பொடியை தொட்டு நிலை வாசலில் கதவில் லாபம், ஓம், அக்ஷயம், நற்பவி, என்ற வார்த்தைகளை எழுதி வைப்பது வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். இந்தப் பொடியை பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு பொட்டு வைக்க பயன்படுத்தலாம்.

- Advertisement -

தெய்வம் வீட்டில் தங்க பூஜை அறையில் எழுத வேண்டிய வார்த்தை:
இந்த பொடியில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கரைத்து உங்கள் வீட்டு பூஜை அறை சுவற்றில், உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி வையுங்கள். சுவர் அழுக்காகி விடும் என்று நினைக்க வேண்டாம். சொந்த வீடாக இருந்தால் கட்டாயமாக சுவற்றிலோ அல்லது ஒட்டி இருக்கும் டயல்சின் மேலோ இந்த பொடியை தொட்டு குலதெய்வத்தின் நாமத்தை எழுதி வையுங்கள்.

வாடகை வீடு, சுவற்றில் எழுவதற்கு வாய்ப்பே கிடைக்காது என்பவர்கள் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் உங்கள் குலதெய்வத்தின் நாமத்தை இந்த பொடியை தொட்டு எழுதி அதை அப்படியே பூஜை அறையில் ஒட்டி வைத்து விட வேண்டும். சுவற்றில் எழுதி இருந்தால் வாரம் ஒரு முறை ஈரத் துணியை போட்டு துடைத்து விட்டு, மீண்டும் இந்த பொடியை பன்னீரில் போட்டு குழைத்து அந்த குலதெய்வத்தின் பெயரை எழுதி வர வேண்டும். இப்படி செய்து வீட்டில் குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்தால், உங்களுடைய வீட்டில் தெய்வ அம்சம் நிறைவாக இருக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டிற்குள் எந்த ஒரு துர்சக்தியும் நுழையாது.

இதையும் படிக்கலாமே: இதை வாயில் வைத்துக் கொண்டு நீங்கள் என்ன பேசினாலும் அது உடனே நடக்கும். கொடுத்த வாக்கு தவறவே தவறாது.

இந்த பொடியை கொஞ்சமாக தண்ணீரில் போட்டு வீட்டின் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம். நிலை வாசலில் தண்ணீர் தெளிக்கும் போது அந்த தண்ணீரில் கொஞ்சமாக இந்த பொடியை சேர்த்து நிலை வாசலில் தெளிக்கலாம். பாசிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கும் எளிமையான வழிகளில் இதுவும் ஒன்று. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -