கவாஸ்கரை மறைமுகமாக தாக்கி பேசிய MS தோனி – இது வீரர்களின் விருப்பம்

dhoni 1

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரான சீனிவாசனின் கிரிக்கெட் வாழ்வின் 50ஆவது ஆண்டு விழா கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய இந்திய வீரருமான தோனி கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியும் கலந்து கொண்டார்.

dhoni 2

இவ்விழாவின் பொது சீனுவாசன் கடந்து வந்த பாதை குறித்த “காபி டேபுள்” என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியினை இந்திய வீரர் அதன் பெற்றுக்கொண்டார். புத்தகத்தினை பெற்றுக்கொண்ட தோனி தொடர்ந்துபேசினார். அப்போது இந்திய வீரர்களில் விருப்பங்களை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறினார்.

அவ்வாறு தோனி பேசியதற்கு காரணம் யாதெனில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தோனியை டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருக்கும் வேளையில் நீங்கள் உள்ளூர் மற்றும் ரஞ்சி போட்டிகளில் ஆடலாம் அது உங்களுக்கு ஆட்டத்திறனை குறையாமல் வைத்து இருக்கும். மேலும் பிட்னஸ் போன்றவைகளும் சரியாக இருக்கும் என்று கூறினார்.

dhoni

இதை சுட்டி காட்டும் விதமாகவே தோனி வீரர்களின் விருப்பங்களை விமர்சிக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் தற்போதைய இந்திய அணியில் ஆடி வரும் தவான் மற்றும் சாஹல் போன்றவர்கள் ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் விடைகொடுத்து ஆடுவதில்லை என்று முடிவில் உள்ளனர். அவர்கள் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடவே அதனை கைவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

விஸ்வாசம் படத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்