அம்பயர் மீது கோவமைடைந்த ஜாதவ் மற்றும் தோனி – காரணம் இதுதான்

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கி ஆடி வருகின்றனர். இன்று இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிலிட்டரி கேப் அணிந்து விளையாடி வருகின்றனர் .

Toss

இந்த கேப்பினை இந்திய வீரர்களுக்கு சீனியர் வீரரான தோனி அளித்தார். தோனிக்கு இந்த கேப்பினை கேப்டன் கிங் கோலி அளித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் இந்த தொப்பியினை அணிந்து விளையாடுகின்றனர்.

இந்த போட்டியின் 15 ஓவரை வீச ஜாதவ் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் சிக்ஸ் அடித்து துவங்கினார். மேலும், அடுத்த பந்தினை வைடாக வீசிய ஜாதவ் அதற்கடுத்த பந்தினை பின்ச்யை நோக்கி வீசினார். அந்த பந்து பின்ச்யின் க்ளோவ்ஸ்சில் பட்டு பின்னால் சென்றது. பந்து அவர் மீது பட்டு சென்றது தெளிவாக தெரிந்தும் அம்பயர் வைட் என்று அறிவித்தார்.

இதனால் ஜாதவ் மற்றும் தோனி ஆகியோர் அம்பயரின் இந்த செயலை கண்டு கோவமடைந்தனர். மேலும் கேப்டன் கோலி பின்ச்யை நோக்கி நடந்து சென்று முறைத்தார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மேலும், அந்த பந்தினை திரும்ப திரும்ப ஒளிபரப்பி அம்பயரையும் காட்டினார் ஒளிப்பதிவாளர்கள். இதனால் தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று மிலிட்டரி கேப் அணிந்து போட்டியில் விளையாகின்றனர் – காரணம் இதுதான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்