2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் தோனியுடன் இவர் ஆடினால் தான் பினிஷிங் ஜோடி சிறப்பாக அமையும் – கம்பீர் கருத்து

gambhir

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வென்று முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் உலககோப்பை தொடரின் பினிஷர்கள் பற்றி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடிவருகிறது. இந்த அணியினை கொண்டு இந்திய அணியால் நிச்சயம் உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியும். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்திய அணிக்கு உள்ளது.

dhoni karthick

மேலும், தோனி இந்த வருடத்தினை சிறப்பாக துவங்கி உள்ளார். அவரது பினிஷிங் நாம் அறிந்ததே இருப்பினும் அவருடன் தினேஷ் கார்த்திக் பின்வரிசையில் ஆடினால் அவர்கள் இருவரது அனுபவமும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க உதவும். மேலும், தோனியின் அனுபவத்திற்கு இணையான அனுபத்தினை கார்த்திக் பெற்றுள்ளார். எனவே, இவர்கள் இருவர் தான் சரியான பினிஷிங் ஜோடி என்று நான் நினைக்கிறன் என்று கம்பீர் தெரிவித்தார்.

அடுத்த முடிவு பிப் 5ஆம் தேதி . நியூஸி அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் இந்திய அணியில் இணைந்த ஆல்ரவுண்டர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்