அடுத்த முடிவு பிப் 5ஆம் தேதி . நியூஸி அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் இந்திய அணியில் இணைந்த ஆல்ரவுண்டர்

கடந்த பல வாரங்களாக நாம் அனைவரும் எதிர்பார்த்தது ராகுல் மற்றும் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்வு குற்றிது தான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொலைக்காட்சி பெண்கள் குறித்த கூறிய சர்ச்சையான கருத்தினால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதுகுறித்த தீர்ப்பு தற்போது பிப்ரவரி 5ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

KL and HP

இந்நிலையில் பி.சி.சி.ஐ இவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்களான ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோரது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று நிபந்தனையுடன் அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியினை வழங்கியுள்ளது.

மேலும், ராகுல் இந்திய ஏ அணியில் தற்போதைக்கு ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் கில் வாய்ப்பு கிடைக்கும் என்றும், பாண்டியா உடனடியாக இந்திய அணியில் இணைவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதன்படி பாண்டியா இந்தியாவிலிருந்து கிளம்பி நியூசிலாந்து சென்றடைந்தார்.

hardik

இருப்பினும், அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இடம்கிடைக்குமா? என்பது அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் மூலம் அறிவிக்கப்படும் பட்டியலில் நாளை காலை தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை காலை பே ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இந்த இருவர் உலகக்கோப்பை தொடரில் டெத் ஓவர்களை வீசி எதிர்அணியை நிச்சயம் கட்டுப்படுத்துவார்கள் – ஜாகீர் கான்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்