பாண்டியாவுடன் புதிய விளம்பரத்தில் கிராம வாசியாக நடித்த தல தோனி – வைரல் வீடியோ

dhoni 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்னும் சில நாட்களில் இந்திய அணியுடன் இணைய உள்ளார். இப்போது கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்த தோனி சமீபத்தில் இந்திய அணி வீரரான ஹர்டிக் பாண்டியாவுடன் விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

dhoni

ஹர்டிக் மற்றும் தோனி ஆகியோர் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டினை ரசித்தபடி துவங்குகிறது அந்த வீடியோ. அதில் ஹர்டிக் தோனியுடன் ஒரு பைனாகுலரில் அந்த போட்டியினை கண்டு கொண்டு இருக்கிறார்.

அப்போது ஸ்டார் டிவி விளம்பரம் அதில் வருகிறது. குறைந்த விலையில் அனைத்து போட்டிகளையும் கண்டு ரசிக்கலாம் என்று அந்த விளம்பரம் ஓடுகிறது. உடனே ஹர்டிக் தோனியிடம் நான் வீட்டிற்கு சென்று டிவியில் போட்டியை காண்கிறேன் என்று கூறிவிட்டு செல்வது போல அந்த விளம்பரம் முடிகிறது.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்டிக் பாண்டியா. இந்த வீடியோ அவரது ரசிகர்களாலும் தோனி ரசிகர்களாலும் தொடர்ந்து வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியுடன் இணைய உள்ளார் தல தோனி.

இதையும் படிக்கலாமே :

பீர் குடித்தபடி சிட்னி வந்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி -வைரல் வீடியோ இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்