பீர் குடித்தபடி சிட்னி வந்த இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி -வைரல் வீடியோ இதோ

ravi

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.

india

சிட்னி ஏர்போர்ட்டில் இருந்து பேருந்து மூலம் ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி பஸ்சில் இருந்து இறங்கும்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவர்கள் பீர் பாட்டில் ஒன்றினை குடித்தபடி கீழே இறங்கினார்.

இந்திய ரசிகர்கள் அவர்களை வரவேற்கும் பொருட்டு ஹோட்டலின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். அப்போது ரவி சாஸ்திரி பீர் குடித்தபடி அவர்களை தாண்டி சென்றார். பிறகு இந்திய அணி வீரர்கள் அவர்களுடய மகிழ்ச்சியில் நடனம் ஆடிய படி ஹோட்டலுக்குள் சென்றனர்.

ரசிகர்கள் இருக்கிறார்கள், கேமரா இருக்குறது மீடியா இருக்கிறது என்று எதை பற்றியும் யோசிக்காமல் பீர் குடித்தபடி சென்ற ரவி சாஸ்திரியை ரசிகர்கள் தங்களது வருத்தத்தினை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

தனது பாணியில் ஆஸ்திரேலிய வர்ணனையாளரை கிண்டல் செய்து ட்வீட் செய்த சேவாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்