தோனியால் மட்டுமே உலகக்கோப்பையில் இதை செய்ய முடியும் – ஜாகீர் கான்

zaheer1

இந்திய அணி தற்போது வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக ஆடிவருகிறது. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை அவர்களது மண்ணில் சென்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

rayudu

இந்நிலையில், மே மாதம் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரை வெல்ல மிக பிரகாசமான வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தோனியின் முக்கியத்துவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி இந்திய அணிக்காக 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். மேலும், அனைத்து ஐ.சி.சி நடத்திய தொடரும் கைப்பற்றி இந்திய அணிக்கு கொடுத்தவர் ஆவார்.

dhoni

அவருடைய இந்த அனுபவமும் இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் எடுக்கும் முடிவுகளும் இந்திய அணிக்கு நிச்சயம் வெற்றிகரமாக அமைத்துள்ளது. எனவே, அவருடைய அறிவுரைகள் மற்றும் முடிவுகள் இந்திய அணி கோப்பையை வெல்ல நிச்சயம் உதவும் என்று ஜாஹீர் கான் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தோனியின் தலைமையில் ஜாகீர் கான் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

பே ஓவல் ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகன் ஷமி இங்கிலீஷ் பேசியதை பார்த்து கலாய்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர், அதை கண்டு சிரித்த கோலி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்