Virat Kohli : தோனியின் பிளானை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்திய கோலி – வைரல் வீடியோ

Koli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதனபடி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களையும், ராகுல் 47 மற்றும் தோனி 40 ரன்களையும் குவித்தனர்.

Toss

பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அபார சதம் மூலம் போட்டியினை 19.4 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து எளிதாக வென்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் என இரண்டு விருதினையும் தட்டிச்சென்றார். ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்திருந்த போது பின்ச்-யை அவுட் ஆக்க தோனி ஒரு பிளானை காலியிடம் கூற அதனை அப்படியே செய்தார் கோலி. உடனே அதே ஓவரில் விக்கெட்டும் விழுந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கோலி தோனியை பார்த்தவாறு கை நீட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு ஓடுகிறார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனியின் அனுபவம் அதிக இடங்களில் கைகொடுக்கிறது. அதை நாம் பல போட்டிகளில் கண்டுள்ளோம். மேலும், அவர் யூகிக்கும் விடயங்கள் பலமுறை அணிக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. இதனால் உலகக்கோப்பை தொடரில் கோலிக்கு சிறந்த வழிகாட்டியாக தோனி இருப்பார் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

Wi vs Eng : ஒரே போட்டியில் 46 சிக்ஸர்கள் 807 ரன்கள் வாரி இறைக்கப்பட்ட சாதனைகள் – விவரம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Virat kohli celebrating wicket with dhoni

- Advertisement -