தோனி பாய் நீங்கள் என்றும் இப்படித்தான். சாம்பியன் என்றும் சாம்பியன் தான். – தலையை புகழ்ந்து தள்ளிய இளம் வீரர்

indian-team

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (18-01-2019) நடந்து முடிந்தது. இந்திய அணி இந்தப்போட்டியை வெற்றிகரமாக முடித்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

rayudu

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை குவித்தது. ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 230 அணி சார்பாக ஹாண்ட்ஸ்காம்ப் 58 ரன்களை குவித்தார். இந்திய அணி சார்பாக சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

ஆஸ்திரேலிய அணியின் இலக்கினை துரத்த ஆரம்பித்த இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்கார்களான தோனி மற்றும் ஜாதவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்த தொடரில் தோனியின் ஆட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் தனது டீவீட்டர் பக்கத்தில் இந்திய அணி வெற்றி குறித்தும் தோனி குறித்தும் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த ட்வீட் :

தோனியின் மாற்றாக இந்திய அணிக்கு இருப்பவர் பண்ட். தோனி பாய் நீங்கள் ஒரு லெஜெண்ட் வாழ்த்துக்கள் மேலும், சாஹல் சிறப்பாக பந்துவீசினார். இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

டார்கெட் இவர்தான். கடைசி 4 ஓவர்களை வீசுபவர்கள் பற்றி அம்பயரிடம் சோதனை செய்த தல தோனி – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்