8 ஆண்டுகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணையும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் – இவரா?

siddle

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் ஒருநாள் தொடரை வெல்லும் முன்னைப்புடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் எதிரான ஒருநாள் தொடர் நாளை (12-01-2019) தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

siddle 1

நாளை காலை இந்திய நேரப்படி சரியாக 7.50am மணிக்கு போட்டி துவங்குகிறது. இந்த முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் 8 வருடங்களுக்கு பிறகு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் அவருக்கான வாய்ப்பு இந்த தொடரில் கொடுக்கப்பட்டுள்ளது. சிடில் கடைசியாக ஒருநாள் போட்டியில் 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இதுவரை அவர் 17 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய அவர் 15 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

siddle 2

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஸ்டார்க், ஹாசல் வுட் மற்றும் கட்டிங் போன்றோர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதால் இவர்களுக்கு இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணியில் மீண்டும் இடம்பிடித்து இருக்கிறார் பீட்டர் சிடில்.

இதையும் படிக்கலாமே :

ரத்தம் வழிந்தபடி மைதானத்தில் இருந்து வெளியேறிய ஆஸி வீரர் பென் கட்டிங் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்