MS Dhoni : நிச்சயம் உங்களைத்தவிர இது போன்று விக்கெட் கீப்பிங் யாராலும் செய்ய முடியாது தல தோனி – வைரல் வீடியோ

Dhoni-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து நாளை ராஞ்சி நகரில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

- Advertisement -

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் ஜாதவ் வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் பின்புறமாக அடிக்கலாம் என்று நினைத்து பேட்டை சுழற்ற அதனை அறிந்த தல தோனி உடனே பந்து செல்லப்போகும் திசைக்கு வேகமாக சென்றார். கிட்டத்தட்ட கேட்ச் பிடித்துவிட்டார். இருப்பினும் அருகில் இருக்கும் பந்தை கணிப்பது மிகவும் சிரமம் என்பதால் அந்த கேட்சை நழுவ விட்டார்.

தற்போது இவரின் இந்த சமயோஜித புத்தி அவரின் ரசிகர்கள் மூலம் பாராட்டப்பட்டும் அந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டும் வருகிறது. தோனியின் கீப்பிங் திறமைகளை நிச்சயம் வரும் இளம் வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் அணியையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த தோனி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -