புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி. சாதனை விவரங்கள் இதோ

dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 333வது சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கி விளையாடி வருகிறார். இன்று சிட்னி நகரில் துவங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. இதனால், இந்திய அணிக்கு 289 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.

dhoni

இதனை தொடர்ந்து விளையாட துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான் முதல் ஓவரில் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 3 ரன்களில் வெளியேற அவருக்கு அடுத்து ராயுடு 0 ரன்களில் வெளியேற இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

அடுத்து நம்ம தல தோனி களமிறங்கினார். அவர் இந்த போட்டி ஆரம்பிக்கும் முன் சர்வதேச ஒருநாள் போட்டியில் மொத்தம் 10,173 ரன்களை குவித்திருந்தார். ஆனால், இந்திய அணிக்காக அவர் குவித்தது 9999 ரன்கள் மட்டுமே. ஏனென்றால், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய லெவன் அணிக்கு தலைமை ஏற்று விளையாடிய தோனி 174 ரன்களை எடுத்திருந்தார். எனவே அவர் இந்திய அணிக்காக இதுவரை 9999 ரன்களே அடித்திருந்தார்.

dhoni 1

தோனி களமிறங்கி அடித்த முதல் ரன்னின் போது 10000 ரன்கள் இந்திய அணிக்காக அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அடைந்தார். மேலும் 10000ரன்களை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையினையும் அடைந்தார். தற்போதுவரை இந்திய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. தோனி 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 140 தேவை.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்கு எதிராக அறிமுக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்