இந்திய அணிக்கு எதிராக அறிமுக போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஆஸி வேகப்பந்து வீச்சாளர் – வீடியோ

jason-be

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (12-01-2019)சிட்னி நகரில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹாண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களை குவித்தார்.

jason

இதனால் இந்திய அணிக்கு 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கினை நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. அதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீச ஆஸ்திரேலிய அணியில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு இன்று அறிமுகமான புதிய வீரரான ஜேசனை அழைத்தார் கேப்டன் பின்ச்.

அதன்படி முதல் ஓவரை வீசினார் ஜேசன். முதல் ஐந்து பந்துகளில் ரன்கள் ஏதும் வரவில்லை கடைசி பந்தினை தவான் கால்பகுதியில் வாங்கினார். உடனே பவுலர் எல்.பி. கேட்க அம்பயர் அவுட் என்று அறிவித்தார். இதனால் தவான் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக :

முதல் போட்டியில் அறிமுகமாகி முதல் ஓவரில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் விக்கெட் வீழ்த்தி ஜேசன் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். சற்றுமுன் வரை இந்திய அணி 13 ஓவர்களுக்கு 34 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

ராகுல் மற்றும் பாண்டியா கிரிக்கெட் விளையாட தடை – இந்திய கிரிக்கெட் வாரியம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்