தல வாவ். தனது புத்திசாலி தனத்தின் மூலம் நியூசி வீரரை ரன்அவுட் செய்த நம்ம தல தோனி – வீடியோ

msd
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. இந்த போட்டியிலும் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறினர்.

rohith

ரோஹித் 2 ரன்களிலும், தவான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பிறகு இறங்கிய கில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். பெரிதும் நம்பப்பட்ட தோனி மட்டுமே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பிறகு, ராயுடு, ஷங்கர் மற்றும் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 252 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அப்போது 6வது வீரராக அந்த அணியின் ஜிம்மி நீஷம் விளையாடி 32 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். அப்போது 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியின் புத்திசாலித்தனமான யோசனை மூலம் ரன் அவுட் ஆக்கி வெளியேறினார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

இறுதியில் நியூசிலாந்து அணி 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 90 ரன்கள் குவித்த அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருதினை தட்டிசென்றார்.

இதையும் படிக்கலாமே :

142 கி.மீ வேகத்தில் வந்த பந்து தலையில் பட்டு சுயநினைவின்றி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -