மகள் மற்றும் மனைவியுடன் சென்னை பீச்சில் தல தோனி -வைரல் வீடியோ இதோ

ziva

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரான சீனிவாசனின் கிரிக்கெட் வாழ்வின் 50ஆவது ஆண்டு விழா சென்னையில் கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய இந்திய வீரருமான தோனி கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழநிச்சாமியும் கலந்து கொண்டார்.

dhoni 2

இவ்விழாவின் போது சீனுவாசன் கடந்து வந்த பாதை குறித்த “காபி டேபுள்” என்ற புத்தகத்தினை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன் முதல் பிரதியினை இந்திய வீரர் அதன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவினை அடுத்து தோனி தனது மனைவி சாக்க்ஷி மற்றும் அவருடைய செல்ல மகள் ஸிவா தோனி ஆகியோருடன் ECR பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று விளையாடினார்.

தோனி தனது மகளுடன் அலையில் கால் நனைத்தபடி விளையாடுகிறார் இதனை அவரது மனைவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். இப்போது இந்த வீடியோ தோனி ரசிகர்களால் பெருமளவு ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள தோனி இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக இருந்த ஓய்வு நாட்களை அவர் தனது குடும்பத்தினரோடு கழித்து வருகிறார்.

இதையும் படிக்கலாமே :

முடிவுக்கு வருகிறது ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை – காரணம் இதுதான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்