முடிவுக்கு வருகிறது ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கை – காரணம் இதுதான்

raina-1
- Advertisement -

இந்திய அணியின் பிரபல இடதுகை நடுவரிசை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக மொத்தம் 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்களை குவித்துள்ளார். மேலும் 18 டெஸ்ட் போட்டிகள் 1மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய அணிக்காக பலமுறை தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரோடு இணைந்து பலமுறை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

raina 2

இந்நிலையில் கடந்த இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா அதன் பிறகு தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. மேலும் அடுத்தமாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் அவர் தேர்வாகவில்லை. இந்திய அணியில் பல இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருவதால் அவரின் இடம் கேள்வி குறியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு அவர் தேர்வாகவில்லை என்றால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது ரெய்னாவின் வயது 33யை நெருங்கி கொண்டிருக்கிறது. மேலும் அணியில் பல திறமைகளுடன் இளம் வீரர்கள் அணியில் நுழைய காத்து கொண்டிருக்கின்றனர்.

raina

எனவே, அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலர் அணியில் இருந்து ஓய்வு அறிவிப்பை அளிப்பார்கள் என்பது தெரிகிறது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்று முன்னாள் கேப்டன் தோனியை வழியனுப்ப ஆவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

பாண்டியாவுடன் புதிய விளம்பரத்தில் கிராம வாசியாக நடித்த தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -