விளம்பரத்தில் நடித்து கொண்டிருக்கும் போது வெயில் தாங்காமல் குடை பிடிக்க சொன்ன தோனி – உதவியாளருடன் விளையாடிய தல தோனி – வைரல் வீடியோ

Dhoni

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni

ஆஸ்திரேலிய அணிவீரர்கள் இன்று ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தோனி ஒரு விளம்பர படத்தில் நடித்து முடித்தார். தற்போது அது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தபோது மதியவேலை காரணமாக வெயில் நிற்கமுடியாமல் அவதிப்பட்டார். உடனே தனது உதவியாளரி அழைத்து குடைபிடிக்க சொன்னார். அதனை ஒரு சிறிய நகைச்சுவையான ஆக்ட் போன்று பதிவிட்டு உள்ளனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக :

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தோனி ரசிகர்கள் பெருமளவு பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வினை அறிவிக்க உள்ள தோனியின் இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால். வலைப்பயிற்சியிலேயே ஸ்டம்பை தகர்க்கும் இவர் போட்டியில் இன்னும் சிறப்பாக வீசுவரோ ? – ஆஸி வேகப்பந்து வீச்சாளர் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்