இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால். வலைப்பயிற்சியிலேயே ஸ்டம்பை தகர்க்கும் இவர் போட்டியில் இன்னும் சிறப்பாக வீசுவரோ ? – ஆஸி வேகப்பந்து வீச்சாளர் வீடியோ

Stonis

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிவீரர்கள் இன்று ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்ஸன் பந்துவீசிவரும் விடியோவை ஆஸ்திரேலிய நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோ பதிவில் சிறப்பாக பந்துவீசும் ரிச்சர்ட்ஸன் பேட்ஸ்மேனை போல்ட் ஆக்குகிறார். இதனை குறிப்பிட்டு அந்த வீடியோவில் எழுதப்பட்டவை : சிறப்பாக வீசினாய் ரிச்சு. இன்னொரு முறை அதேமாதிரி வீசு என்று குறிப்பிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அங்கு சுற்றுபயணம் சென்றிருந்த போது ரிச்சர்ட்ஸன் சிறப்பாக பந்துவீசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடருக்காக தோனியை தொடர்ந்து நியூ லுக்குக்கு மாறிய கிங் கோலி – என்ன ஸ்டைல் அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்