உங்கள் வாழ்வில் மங்களங்கள் அதிகம் உண்டாகச் செய்யும் மந்திரம் இதோ

dhooba-manthiram

கோயில் என்பது இறைவன் வாழும் வீடு, நமது வீட்டிலிருக்கும் பூஜையறை என்பது இறைவன் வாழ்கின்ற கோயில். ஆகவே இந்த இரு இடங்களிலும் தெய்வ சக்திகள் எப்போதும் குடியிருக்க முறைப்படி பூஜைகள் செய்வது சிறப்பானதாகும். அப்படி பூஜைகள் செய்கின்ற போது இறைவனுக்கு வாசனை தூபங்கள் காட்டுவது இன்றியமையாததாகிறது. தூபங்கள் காட்டி இறைவனை வழிபடுகின்ற போது கூற வேண்டிய ஒரு மந்திரம் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அம்மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Pooja room

தூப வழிபாடு மந்திரம்

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

வீட்டில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் நேரத்தில் கூற வேண்டிய மந்திரம் இது. குறிப்பாக இம்மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற போது, மலர்கள் சாற்றி தீபம் ஏற்றிய பிறகு தூபம் காட்டும் போது இம்மந்திரம் துதித்து வழிபடுவதால், வீட்டில் துர்சக்திகள் நீங்கும். பூஜையின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

dhoopam

- Advertisement -

நமது சாஸ்திரங்களில் தெய்வ சக்திகள் நிறைந்திருக்கும் இடங்கள் எவை என்பதை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது . அதில் நறுமணங்கள் நிறைந்த இடங்களில் தெய்வீக சக்திகள் நிறையும் என கூறுகிறார்கள். இதன் காரணமாகத்தான் தெய்வ பூஜைகளின் போது, வாசமிக்க தூபங்கள் கொளுத்தி இறை வழிபாடு செய்யப்படுகிறது. அப்படி தீபங்கள் காட்டி வழிபடும் சமயம் மேற்கூறிய மந்திரத்தை ஜெபித்து, தெய்வ பூஜை செய்வதால் உறுதியான நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பொருள் விரயம் தடுக்கும் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dhoopam mantra in Tamil. It is also called as Poojai mantras in Tamil or Dhoopa slokam in Tamil or Veetu poojai manthirangal in Tamil or Poojai manthirangal in Tamil.