தோஷங்கள் நீங்க தீப பரிகாரம்

deepa pariharam
- Advertisement -

ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் அந்த தோஷத்தால் அவருக்கு நடக்க வேண்டிய சுப காரியங்கள் தடைபடும். இதே போல் ஒருவர் இருக்கும் இல்லத்தில் ஏதாவது தோஷம் இருந்தாலும் சுபகாரியத்தடை என்பது ஏற்படும். எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றிகள் கிடைக்காது. இப்படி கஷ்டப்படுபவர்கள் தங்களுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஜோசியரிடம் கொண்டு போய் கொடுத்து பார்க்க சொல்லும்பொழுது அவர்கள் தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பல்லாயிர கணக்கில் பணங்களை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

வீட்டில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்று வாஸ்து நிபுணரை அழைத்து கேட்டால் அவரோ வீட்டில் இந்த இடம் சரியில்லை அந்த இடம் சரியில்லை அதை சரி செய்ய வேண்டும் இதை சரி செய்ய வேண்டும் என்று நம்முடைய பணத்தை கரந்து விடுவார்கள். இப்படி அதிக அளவில் எந்த செலவும் செய்யாமல் மிகவும் எளிய முறையில் நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய தோஷத்தை நீக்கக்கூடிய அற்புதமான ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் அனைத்தும் நன்றாக இருந்தால் அவருடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இதே போல் தான் நாம் வாழும் இல்லத்தில் இருக்கக்கூடிய எட்டுத்திக்குகளும் சரியாக இருந்தால் நம்முடைய இல்லமானது சொர்க்கத்திற்கு சமமாக திகழும். எந்தவித குறையும் இருக்காது. சீரும் சிறப்புடன் இருப்போம். இப்படி நம்முடைய வாழ்க்கை சீரும் சிறப்புமாக எந்தவித தடையும் இல்லாமல் இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம்.

இந்த பரிகாரத்தை அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் ஆரம்பித்து செய்யலாம் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பித்தும் செய்யலாம். நம்முடைய ஜாதகத்தை நாம் எடுத்துப் பார்க்கும்பொழுது அதில் கட்டங்கள் போட்டிருப்பார்கள். அந்த கட்டத்தை நன்றாக உற்று நோக்கும் பொழுது அதில் 12 கட்டங்கள் இருக்கும். இது 12 ராசிகளுக்கும் லக்னத்திற்கும் உரிய கட்டங்களாக திகழ்கிறது. இந்த 12 கட்டங்களை நம்முடைய வீட்டு பூஜை அறையில் பச்சரிசி மாவால் வரைய வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு கட்டத்திற்கு நடுவிலும் மஞ்சளை பூச வேண்டும். அந்த மஞ்சளுக்கு மேல் புதிதாக வாங்கிய அகல் விளக்குகளில் மஞ்சள் குங்குமம் வைத்து அந்த கட்டங்களில் வைக்க வேண்டும். பிறகு அதில் நெய் ஊற்ற வேண்டும். இதற்கு அடுத்தார் போல் சமையலுக்கு உபயோகப்படுத்தும் சீரகத்தை ஒவ்வொரு அகல் விளக்கிலும் சிறிதளவு போட வேண்டும். பிறகு அதில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு 12 முறை வீட்டை வளம் வர வேண்டும் வீட்டை வளம் பெற முடியாதவர்கள் தன்னைத்தானே 12 முறை சுற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து மூன்று நாட்களோ அல்லது 12 நாட்களோ ஏற்றலாம். தொடர்ச்சியாக ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஏற்றுபவர்களாக இருந்தால் மூன்று அமாவாசை தோறும் அல்லது மூன்று பௌர்ணமி தோறும் ஏற்றலாம். இப்படி ஏற்றுவதன் மூலம் நம்மிடமும் நம்முடைய வீட்டிலும் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் சரியாகி நம்முடைய வாழ்க்கை சீராக இயங்க ஆரம்பிக்கும். இப்படி சீராக இயங்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் சீரக தீபத்தை ஏற்றுகிறோம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க இதை வாங்கி கொடுத்தால் போதும்.

இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கி சீரான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -