நினைத்தது நடக்க இதை வாங்கி கொடுத்தால் போதும்.

sivan abisegam
- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் அற்புதமான ராத்திரியாக திகழக் கூடியது தான் மகா சிவராத்திரி. மாத மாதம் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி என்பது மிகவும் விசேஷகரமாக அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பெருவிழாவாகவே திகழ்கிறது. அதனால் தான் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். இப்படிப்பட்ட மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் அருளை பெறுவதற்கும் நாம் நினைத்தது நிறைவேறுவதற்கும் எந்த பொருட்களை வாங்கி பூஜைக்கு தர வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த உலகில் இருக்கக்கூடிய அனைத்து சிவாலயங்களிலும் இந்த மகா சிவராத்திரி என்பது மிகவும் விசேஷகரமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். அன்றைய தினம் உண்ணா நோன்பிருந்து இரவில் நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளையும் பார்த்து உறங்காமல் கண் விழிப்பவர்களுக்கு சிவகதி கிடைக்கும் என்பது நம் ஆன்றோர்களின் வாக்கு. அப்படி நாம் சிவாலயத்திற்கு சென்று கண்விழித்து சிவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் அந்த நான்கு கால பூஜைகளில் நாம் கலந்து கொள்வதன் மூலமும் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இப்படி நாம் கலந்து கொள்ளும் பொழுது சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுவதற்கு தேவையான பொருட்களை நம்மால் இயன்ற அளவு வாங்கித் தர வேண்டும். ஒவ்வொரு விதமான பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கும் என்றாலும் மகா சிவராத்திரி அன்று நாம் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு விபூதியையும், வில்வத்தையும் அபிஷேகத்திற்காக வாங்கி தர வேண்டும்.

இதை நான்கு கால பூஜைக்கும் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் செல்கிறோம் செல்லும் பொழுது நான்கு பாக்கெட் விபூதியையும் நான்கு பாக்கெட் வில்வத்தையும் வாங்கிக் கொண்டு போய் அப்படியே கொடுக்காமல் ஒவ்வொரு கால பூஜைக்கும் தனித்தனியாக ஒரு வில்வ பாக்கெட் ஒரு விபூதி பாக்கெட் என்று வாங்கி தந்தால் தான் அந்த நேரத்தில் நடைபெறக்கூடிய பூஜையில் அந்த பொருளை உபயோகப்படுத்துவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கால பூஜைக்கு தனித்தனியாக ஒவ்வொரு முறையும் வாங்கி நம் கைகளால் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி கொடுக்கும் பொழுது நம்முடைய வேண்டுதலை நாம் மனதார நினைத்து சிவபெருமானை வழிபட்டு விட்டு தர வேண்டும். விபூதியை வாங்கித் தரும் பொழுது முடிந்த அளவிற்கு பசுஞ்சானத்தால் ஆன சுத்தமான விபூதியாக பார்த்து வாங்கி தர வேண்டும். தங்களால் எவ்வளவு வாங்கித்தர முடியுமோ அவ்வளவு வாங்கி தரலாம். ஆனால் ஒவ்வொரு கால பூஜைக்கு என்று தனித்தனியாக முதல் கால பூஜைக்கு எவ்வளவு வாங்கி தருகிறோமோ அதே அளவோ அல்லது அதைவிட அதிகமாகவோ வாங்கி தர வேண்டுமே தவிர குறைவாக வாங்கி தரக்கூடாது.

இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் என்பது நிறைவேறும். இதோடு மட்டுமல்லாமல் சிவபெருமானின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் நிலைத்து இருக்க விநாயகர் வழிபாடு

பத்து ரூபாய் பாக்கெட் ஆக இருந்தாலும் ஒவ்வொரு கால பூஜைக்கும் மனதார வேண்டிக் கொண்டு இந்த பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளையும் பெற்று நினைத்ததையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -