தோஷங்கள், பாவங்கள் தீர்ந்து வீட்டில் செல்வம் பெருக அரச இலை தீபத்தை இவ்வாறு ஏற்றி வாருங்கள்

deepam
- Advertisement -

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அவை நம்மிடம் நிலைத்திருக்க அதிர்ஷ்டம் என்பது இருக்க வேண்டும். சிலருக்கு வருமானம் வருவதிலேயே பிரச்சனை இருக்கும். சிலருக்கு எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்றார்போல் செலவுகளும் வந்து கொண்டிருக்கும். அதிலும் சிலருக்கு வாங்கிய கடன்களை அடைப்பது என்பதே முடியாமல் இருக்கும். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்க தான் செய்கிறது. இதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கும் தோஷங்களும் அல்லது அவர்கள் அறியாமல் செய்த பாவங்களின் வினையாகவும் இருக்கலாம். இவ்வாறான பாவங்களையும், தோஷங்களையும் நீக்கி வீட்டில் செல்வத்தை நிலைக்கச் செய்ய அரச இலை தீபத்தை ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். அதனை எவ்வாறு ஏற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

arasa-mara-pillaiyar

பெரும்பாலும் பல கோவில்களில் அரசமரம் இருப்பதையும் அதன் அடியில் பிள்ளையார் இருப்பதையும் பார்த்திருப்போம். அரச மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை தொழுவதினால் கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருக்கும் என பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம். இதற்கு காரணம் என்னவென்றால் அரசமரத்தில் முப்பெரும் தேவர்கள் வாசம் செய்வதாலே அதற்கு அடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை பூஜை செய்ய நல்ல பலன்கள் கிடைக்கிறது. அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணு பகவானும், மேற்புறமுள்ள இலை பகுதியில் சிவனும் இருப்பதாக ஐதீகமாகும்.

- Advertisement -

இவ்வாறு சிறப்புமிக்க அரச மரத்தின் இலையை தோரணமாக செய்து நிலை வாசற்படியில் கட்டினால் கடன்கள் தீர்ந்து நன்மை உண்டாகும்.

arasa-ilai

அரச இலை தீபம்:
அரச மரத்தின் இலையை பறித்து சுத்தம் செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தாம்புல தட்டில் அரச இலையின் காம்புப் பகுதி கடவுளை பார்த்தவாறும் அதன் நுனிப்பகுதி உங்களை பார்த்தவாறும் வைத்துக்கொண்டு அதன் பின் ஒரு அகல் விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அரச இலையின் மீது வைத்து விட வேண்டும். பின்னர் அகல் விளக்கில் எண்ணை ஊற்றி பச்சை நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏறிவதும் அரச இலையின் காம்பு பகுதியை பார்த்தவாறே இருக்க வேண்டும்.

- Advertisement -

அரசமரத்தின் இலைகளை சனிக்கிழமையில் மட்டும் தான் பறிக்க வேண்டும். மற்ற எந்த நாட்களிலும் பறிப்பது என்பது நன்மையைத் தராது. இந்த அரச இலை தீபத்தை 16 வாரங்கள் தொடர்ந்து ஏற்றிவர உங்கள் பாவங்கள் தோஷங்கள் தீர்ந்து வளமான வாழ்வினை பெற முடியும். சனிக்கிழமை தொடங்கிய இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வர உங்கள் கடன்கள் விரைவாக குறைய ஆரம்பிக்கும்.

agal-vilakku

ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்களுகென்று ஒவ்வொரு எண்ணிக்கையில் இந்த அரச இலை தீபத்தை ஏற்றி வர சிறந்த பலன்கள் உண்டாகும். ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் 12 அரச இலைகள் வைத்து 12 தீபங்கள் ஏற்ற வேண்டும். திங்கட்கிழமை பிறந்தவர்கள் மூன்று தீபங்களும், செவ்வாய்க் கிழமை பிறந்தவர்கள் 2 தீபங்களும் ஏற்ற வேண்டும்.

புதன் கிழமையில் பிறந்தவர்கள் 3 தீபங்களும், வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் 5 தீபங்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் 6 தீபங்களும், சனிக் கிழமை பிறந்தவர்கள் 9 அரச இலை தீபங்களும் ஏற்ற வேண்டும். மும்மூர்த்திகள் வாசம் செய்யும் அரசயிலை வைத்து தீபம் ஏற்றிவர அவர்கள் மூவரின் அருளும் முழுவதுமாக கிடைத்து உங்கள் பாவங்கள், தோஷங்கள் தீர்ந்து உங்கள் வாழ்க்கை வளமாக மாறும்.

- Advertisement -