- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருஷ்டி தோஷங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாக

திருஷ்டி தோஷங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாக

- Advertisement -

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நிறைந்த வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான தினமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. மேலும் அன்றைய தினம் விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தியும் வருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தோஷங்களையும் திருஷ்டிகளையும் நீக்குவதோடு நல்ல முன்னேற்றத்தையும் உண்டாக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

திருஷ்டி தோஷங்கள் நீங்க பூஜை

ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. அந்த நாளில் வரக்கூடிய நட்சத்திரத்தை பொருத்தும், திதியை பொருத்தும், கிழமையை பொருத்தும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக இருக்கும் பட்சத்தில் அந்த நாளிற்கு கூடுதல் சிறப்பு உண்டாகும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளாகவும் அம்பிகை, முருகன், விநாயகர், சிவபெருமான், பெருமாள் என்று அனைத்து தெய்வங்களுக்கும் உரிய நாளாகவும் தான் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய வீட்டு நிலை வாசலிலும் நாம் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது கிழக்கு திசை பார்த்தவாறு இருக்க வேண்டும். மேலும் இந்த தீபத்திற்கு அருகிலேயே ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது தட்டிலோ 11 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை வைக்க வேண்டும். நிலைவாசலில் ஏற்றிய தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு தீபத்தையும் ஏலக்காயையும் எடுத்து பூஜையறையில் வைத்து தீபத்தை குளிர வைத்துவிடலாம்.

இதே போல் மாலை 6:00 மணிக்கு அதே தீபத்தை வீட்டு நிலை வாசலில் வைத்து ஏற்ற வேண்டும். மேலும் அந்த ஏலக்காயையும் நிலை வாசலில் தீபத்திற்கு அருகிலேயே வைத்து விட வேண்டும். மாலை நேரத்திலும் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த தீபம் எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை எடுத்து வீட்டு பூஜை அறையில் வைத்து குளிர வைத்து கொள்ளலாம். ஏலக்காயை நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறையில் நாம் சிறப்பு மிகுந்த அக்டோபர் 10ஆம் தேதி செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான திருஷ்டிகளும் தோஷங்களும் நீங்குவதோடு குடும்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். இரண்டு வேலையும் தீபம் ஏற்ற இயலவில்லை என்பவர்கள் ஒருவேளை மட்டுமாவது இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சரியான முடிவை எடுக்க உதவும் வழிபாடு

அன்றாடம் செய்யக்கூடிய தீப வழிபாட்டோடு இந்த ஒரு எளிமையான பொருளையும் அருகில் வைப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்