எதிரிகள் மற்றும் துரோகிகளின் பிடியில் மாட்டிக் கொள்ளும் ஆறு ராசிகள். இவற்றிலிருந்து விடுபட சித்தாந்தம் கூறும் வழிமுறை

enemy
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு எதிரிகள், துரோகிகள் என்று யாரும் இல்லாமல் இருப்பதில்லை. இவ்வாறு நமக்கு பிரச்சனை கொடுக்கும் எதிரிகள் அல்லது துரோகிகள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் நமக்கு தெரியாதவர்களாக இருக்கிறார்களா? என்று முதலில் யோசிக்க வேண்டும். இப்படி இந்த இரண்டு கேள்விகளை நமது மனதுக்குள்ளே கேட்டுக் கொண்டோம் என்றால் அதற்கு விடையும் நம்ஞமால் அறிந்து கொள்ள முடியும். நம்மை சுற்றி இருக்க கூடிய, நாம் நெருக்கமாக பழக கூடிய நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ அல்லது அவர்களாகவே நமக்கு எதிரிகள் அல்லது துரோகிகளாக மாறிவிடுகின்றன. இவ்வாறான எதிரி தொல்லையில் இருந்தும் துரோகங்களில் இருந்தும் விடுபட இந்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வாருங்கள் அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

bad-energy

மனிதர்களைப் பற்றி சித்தாந்தத்தில் கூறியிருப்பது என்னவென்றால் ராஹி, விராஹி என இரு வித மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் ராஹி என்பவர்கள் இரக்ககுணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.விராஹி என்பவர்கள் முதலில் சொன்னதற்கு நேர்மாறாக மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுபவர்களாகவும், செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இவ்வாறு ராஹி எனப்படுபவர்கள் விராஹி எனப்படுபவர்களும் சந்தித்து பழகும் பொழுது கண்டிப்பாக எதிரிகள் மற்றும் துரோகிகள் உருவாவதை தவிர்க்க முடியாது. எனவே ஒருவரிடம் பழகும் பொழுது அவர் என்ன குணம் படைத்தவர் என்று சிந்தித்து கவனத்துடன் அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எதிர்மறையான குணம் படைத்தவர் என்றால் நிச்சயம் அவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பதே உங்களுக்கு நன்மையைக் கொடுக்கும்.

enemy

நாம் நல்ல நிலைமையில் இருந்து மற்றவர்கள் மத்தியில் சிறப்பு வாய்ந்தவராக இருக்கும் பொழுது நம்மை ஒருவர் புகழ்ந்து கொண்டே இருப்பதனால் அவர்களின் புகழை நாம் விரும்புவோம். சிறிது காலத்தில் நம்மை விட வேறு ஒரு சிறந்த நட்பு அவருக்குக் கிடைத்து விட்டது என்றால் நமக்கு அவர் துரோகம் இழைத்துவிடுவார். இவ்வாறு நம்மை சுற்றி எப்போதும் புகழாரம் சொல்பவரே நமக்கு துரோகியாக மாறுகின்றனர்.

- Advertisement -

அடுத்ததாக எப்பொழுதும் நம்மிடம் சங்கடங்களை சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர் அதாவது நம்மிடம் எதையாவது எதிர்பார்த்து நான் இவ்வளவு துன்பப் படுகிறேன், எனக்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கிறது, எனக்கு பணக்கஷ்டம் அதிகமாக இருக்கிறது என்று நம்மிடம் எதையாவது எதிர்பார்த்து புலம்பிக் கொண்டே இருப்பவர்கள் நாம் செய்த உதவிக்கு பின்னர் நமக்கே எதிரியாக மாறி விடுகிறார்கள்.

enemy1

அதிலும் முக்கியமாக இந்த ஐந்து ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் சிம்மம், ரிஷபம், கும்பம், விருச்சிகம், மிதுனம் இந்த ராசிக்காரர்கள் நிச்சயம் தங்கள் வாழ்வில் இதுபோன்ற எதிரிகள் மற்றும் துரோகிகளை சந்திக்காமல் இருக்க முடியாது. இவர்களின் மூலம் வரும் பிரச்சனையை நிச்சயம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.

simmam

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார் போல் ஒரு சில விஷயங்களை கவனமாக உற்று நோக்கி செயல்படுவதன் மூலம் இவ்வாறான எதிரிகள், துரோகிகளின் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க முடியும். மிகவும் புகழ்ந்து பேசுபவர்கள், அதிகம் குழைபவர்கள், கலகம் சொல்பவர்கள், பொறாமை படுபவர்கள் இவ்வாறான நான்கு குணங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு தென்பட்டது என்றாலும் அவர்களிடம் இருந்து சற்று தூரமாகவே இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -