இந்த விஷயம் தெரிஞ்சா, இனி இந்த டைப்பரை பெரியவங்க கூட வாங்கி வீட்ல ஸ்டோர் செஞ்சு வச்சுப்பீங்க. உங்க வீட்ல குழந்தைகள் இல்லையென்றாலும் கூட.

diaper
- Advertisement -

குழந்தைகள் இல்லாத வீட்டில் டைப்பர் எதற்கு என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் கட்டாயம் எழுந்திருக்கும். ஒரு சின்ன குறிப்புக்காக நாம் அதை பயன்படுத்த போகின்றோம். அது எந்த குறிப்பு, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும், அதோடு சேர்த்து சின்ன சின்ன பயனுள்ள சமையலறை குறிப்புகளையும் தான் இந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பை படிச்சு பாருங்க. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க.

குறிப்பு 1:
முதலில் டைப்பர் குறிப்பையே பார்த்து விடுவோம். டைப்பரை முதலில் கிழித்து விடுங்கள். குழந்தைகளுக்கு டைபரை போட்டுவிட்டு அதை ரிமூவ் செய்யும்போது, இரண்டு ஓரங்களிலும் கிழித்து எடுப்பீர்கள் அல்லவா. அதேபோல புது டயப்பரை கிழித்து விட்டால், டைப்பர் திறந்தபடி நமக்கு கிடைக்கும். அதன் உள்ளே பச்சை தண்ணீரை ஊற்ற வேண்டும். ஒரு ட்ரேவுக்கு மேலே டயப்பரை விரித்து வைத்துவிட்டு, தண்ணீரை ஊற்றினால் தண்ணீரை அனைத்தும் அந்த டைபர் உறிஞ்சிக் கொள்ளும்.

- Advertisement -

இந்த டைப்ரை ஒரு டிரைவில் வைத்து ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். டைபருக்கு உள்ளே இருக்கும் தண்ணீர் அப்படியே ஐஸ் கட்டியாக மாறிவிடும். இப்போது இந்த டைப்பரை ஐஸ் பேக்காக பயன்படுத்தலாம். குழந்தைகள் கீழே விழுந்து விட்டால், பெரியவர்களுக்கு கை வலி, கால் வலி, முட்டி வலி, இருந்தால் நிறைய நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கழுத்து வலி இருந்தால் இந்த டைப்பரை அப்படியே எடுத்து வலியுள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் கியூபை தூண்டில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தண்ணீர் ஒழுகும் அல்லவா. அப்படி எல்லாம் இந்த டைப்பரில் தண்ணீர் லீக்கேஜ் ஆகாது. காசு கொடுத்து ஐஸ் பேக் வாங்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. பிடிச்சிருந்தா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க.

குறிப்பு 2:
வர மிளகாய், புளி ஜாடி, இவைகளுக்குள் பறக்கக்கூடிய பூச்சு வந்துவிடும். அந்த ஜாடியை திறந்தாலே உள்ளே இருந்து ஒரு பூச்சி பறக்கும் அல்லவா. அது வராமல் இருக்க என்ன செய்வது. நான்கைந்து கிராம்புகளை புளி ஜாடியிலும், மிளகாய் டப்பாவிலும் போட்டு வையுங்கள். பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:
அப்பளத்தை டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் சீக்கிரம் ஈரமாகி நமித்து போய்விடும். அதாவது பிரஷ்ஷாக இருக்காது. அப்பளம் ஸ்டோர் செய்திருக்கும் டப்பாவில் அரை ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வையுங்கள். அப்பளம் எப்போதும் போல பிரஷ்ஷாக இருக்கும். வறுக்காத பச்சை அப்பளத்திற்கு இந்த குறிப்பு.

குறிப்பு 4:
ரொம்ப நாள் பயன்படுத்தாத பூட்டு, துருப்பிடிச்சு லாக் பண்ண கஷ்டமா இருக்கா. அந்த பூட்டை பயன்படுத்தக்கூடிய நேரம் வந்துவிட்டதா. உடனடியாக அந்தப் பூட்டை சரி செய்ய சூப்பர் ஐடியா. கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ளுங்கள். பூட்டின் சாவியை மட்டும் லேசாக அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடு செய்து கொள்ளுங்கள். இப்போது துருப்பிடித்திருக்கும் பூட்டை எடுங்கள். சாவி போடக்கூடிய ஓட்டை, பூட்டின் மேல் இருக்கக்கூடிய ஓட்டை என்று எல்லா ஓட்டைகளிலும், இந்த வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை விட்டு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் சாவியை பூட்டில் போட்டு மூடித் இருந்தால் பிரச்சனையாக இருந்த பூட்டு கூட சூப்பராக லாக்காகும். சூப்பராக திறக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -