வாடகை வீட்டில் குடியேற வாஸ்து பார்ப்பது அவசியமா ?

2632
vaasthu
- விளம்பரம் -

தாங்கள் வசிப்பதற்காக வீடுகட்டும் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக பார்த்து கட்டுவது அவசியம். அதே போல வாடகை வீட்டில் குடியேற நினைப்பவர்கள் அவசியம் வாஸ்து பார்க்க வேண்டுமா? இதனால் பயன் ஏதும் உண்டா என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

vasthu

வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் வாஸ்து என்பது அத்யாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எங்கு இருந்தாலும் நாம் இருக்கும் இடத்தில் நம்முடைய உடலுக்கான ஆரோக்கியமும், குடும்ப முன்னேற்றத்திற்கான பணவரவும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அவசியம் அல்லவா. இவை அனைத்தும் கிடைக்க, நாம் வாழும் வீட்டிற்கு வாஸ்துவும் அவசியம். வாடகை வீடுகளில் வாஸ்துவை நுன்னிப்பாக பார்க்கவில்லை என்றாலும் பொதுவான சிலவற்றை பார்ப்பது அவசியம்.

- Advertisement -

தென் கிழிக்கு மூலையில் சமையல் அரை இருப்பது, தென் மேற்கு மூலையில் பணப்பெட்டி வைப்பதற்கான அரை இருப்பது போன்று சில வாஸ்து விதிகளை கவனிப்பது அவசியம். அதோடு வீட்டிற்குள் காற்றோட்டம் இருப்பதும், வெளிச்சம் இருப்பதும் மிக மிக முக்கியம். சிலர், நல்ல காற்றோட்டமும் வெளிச்சமுமே உண்மையான வாஸ்து என்று கூறுவதுண்டு.

vasthu

வாடகை வீடு தானே எப்படி இருந்தால் என்ன? ஓர் இரு வருடங்களில் காலி செய்துவிடலாம் என்று எண்ணி குடியேற வேண்டாம். வீட்டின் வாஸ்து முறை சரி இல்லை என்றால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு அறிவியல் ரீதியாகவும் சில காரணங்களும் உண்டு.

உதாரணத்திற்கு வீட்டின் வாசலில் இருந்து வரும் காற்றை உடனே தடுக்கும் படி எந்த சுவரும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் வெளியில் இருந்து வரும் காற்றானது அந்த சுவரில் முட்டி நம் மீது அடிக்கும். இது உடல்நிலையை நிச்சயம் பாதிக்கும். இதனாலே நம் முன்னோர்கள் முன் வாசலிற்கு நேராக பின் புறமும் ஒரு வாசலை அமைத்தனர்.

தற்போதுள்ள கால மாற்றத்தில் பின்புறம் வாசல் இல்லை என்றாலும் காற்றை தடுக்கும்படி சுவர் அமைக்காமல் வாசல் வழியாக வரும் காற்றை வீட்டின் எல்லை வரை தடை இன்றி பயணிக்க செய்வது அவசியம். இது போன்ற அடிப்படை காற்றோட்ட வாஸ்துவை வாடகை வீடுகளில் பார்ப்பது அவசியம்.

Advertisement