வாஸ்து படி பூஜை அரை, பண பெட்டி அரை போன்றவை எங்கு இருக்க வேண்டும் தெரியுமா ?

vasthu

பொதுவாக வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அறைகளும் அமையப்பெற்றாலே அந்த வீட்டில் நேர்மறை சக்தி அதிக அளவில் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒரு வீட்டில் எந்த அறையை எங்கு அமைப்பது நல்லது என்று பார்ப்போம் வாருங்கள்.

vasthu

பூஜை அறை வாஸ்து:

பூஜை அறை என்பது ஒரு வீட்டிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறையாகும். பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்று ஆன்றோர்கள் பலர் கூறுகின்றனர். அதன் படி பார்த்தல் சூரியன் கிழக்கு திசையில் தான் உதிக்கிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் பூஜை அறைய அமைப்பது வாஸ்து படி விஷேஷம் ஆகும்.

பொதுவாக வடகிழக்கு மூலையில் பூஜை அறையை தவிர வேறு எந்த அறையும் இருக்க கூடாது(ஹால் இருக்கலாம்). அப்படி வேறு ஏதாவது அறைகள் இருந்தால் அந்த அறையில் தங்குவது உசிதம் அல்ல.

சமையல் அறை வாஸ்து:

பெண்களை பெருத்தவரை சமையல் அறை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் பல மணி நேரங்கள் சமையல் அறையில் இருப்பதால் அந்த அறை வாஸ்து படி இருப்பது முக்கியம் ஆகும். ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். அதே போல தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.

vasthu

- Advertisement -

படுக்கை அறை வாஸ்து:

மனிதர்கள் பகலில் ஊரெல்லாம் ஓடி ஓடி உழைத்தாலும் இரவில் ஒரே அறையில் தான் படுத்து உறங்குகின்றனர். ஒரு நாளில் குறைந்தது 10 மணி நேரம் வரை செலவிடும் படுக்கை அறையானது வாஸ்துப்படி அமைப்பதே சாலச்சிறந்தது. ஒரு வீட்டின் படுக்கை அறையானது தென்மேற்கு திசையில் இருப்பதே நல்லது.

Vastu

பணம் வைக்கும் பீரோ அல்லது பெட்டி:
வீட்டின் பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருப்பதே சிறந்தது. இதுவே குபேர முலை ஆகும். அதே போல வீட்டில் குபேர முலை சற்று உயர்ந்து இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய மந்திரம் மற்றும் பரிகாரம்

இது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள், ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English overview:
This article tells about pooja room vasthu(poojai arai vasthu), kitchen vasthu(samayal arai vasthu) and bad room vasthu in Tamil. These vasthu tips really helps the people who build the new houses. It is called as Vasthu padi veedu in Tamil.