காலை உணவிற்கு செய்யும் தோசயை இனிமேல் இவ்வாறான சுவைகளில் சமைத்துக் கொடுத்து பாருங்கள். சலிக்காமல் சாப்பிடுவார்கள்

dosai
- Advertisement -

என்னதான் காலை உணவிற்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று பல வகையான உணவுகள் இருந்தாலும், அனைவருமே அதிகமாக விரும்பி சாப்பிடுவது தோசையை தான். அவித்து சாப்பிடும் இட்லி தான் உடம்புக்கு நல்லது என்று தெரிந்தாலும் கூட அனைவருக்கும் பிடித்தது தோசையாக தான் இருக்கிறது. அதிலும் பலவிதமான சுவைகளில் தோசையை சமைத்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். வாருங்கள் புது விதமான சுவைகளில் சமைக்கும் தோசையை பற்றி தெரிந்து கொள்வோம்.

dosai

கொத்தமல்லி தோசை:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, மற்றும் அவற்றிற்கு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை தோசை மாவுடன் சேர்த்து கலந்து, தோசை ஊற்ற வேண்டும். இந்த தோசை ஒரு நல்ல மனத்துடன் சுவையாக இருக்கும்.

- Advertisement -

பீட்ரூட் தோசை:
மிக்ஸி ஜாரில் துருவிய பீட்ரூட், 4 வரமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்டு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை தோசை மாவுடன் சேர்த்து கலந்து தோசை ஊற்றி எடுக்க நல்ல சிவப்பு கலருடன் சுவையான தோசை கிடைக்கும்.

dosai

கேரட் தோசை:
தோசைக்கல்லில் தோசை மாவினை ஊற்றி, அதன் மீது நறுக்கி வைத்த வெங்காயம், துருவிய கேரட், நீளவாக்கில் நறுக்கிய தக்காளி துண்டுகள் போன்றவற்றை நன்றாக பரப்பி விட வேண்டும். தோசை வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

நூடுல்ஸ் தோசை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிறிதளவு நூடுல்ஸை சேர்த்து வேக விட வேண்டும். பிறகு தோசைக் கல்லில் தோசை ஊற்றி அதன் மீது தயாரான நூடுல்சை பரப்பி வைத்து தோசை வெந்ததும் மடித்து எடுக்க வேண்டும்.

dosai

உருளைக்கிழங்கு மசாலா தோசை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடலைப் பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் வேக வைத்து உடைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு இறக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லில் தோசை ஊற்றி அதன்மீது இந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து எடுக்க வேண்டும்.

dosai

முட்டை தோசை:
தோசைக்கல்லில் தோசை ஊற்றி, அதன் மீது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு, சிறிதளவு மிளகாய்த்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக தோசை முழுவதுமாக பரப்பிவிட வேண்டும். ஒருபுறம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக பலவித சுவைகளில் பலவித நிறங்களில் தோசைகளை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -