பிரியாணி பிரியர்களுக்கான, சுவையான திண்டுக்கல் சிக்கன் பிரியாணி எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

biriyani
- Advertisement -

தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளில் மிகவும் அதிகமாக இருப்பது பிரியாணி கடைகள் தான். அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் அதிகமாக உள்ளனர். தினமும் பிரியாணி என்றாலும் கூட சிலர் சலிக்காமல் சாப்பிடுவார்கள். மிகவும் முக்கியமாக தலப்பாக்கட்டி பிரியாணி என்றால் அதற்கு தனி வரவேற்பு உண்டு. அவ்வாறான புகழ்மிக்க திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

biriyani

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ, பிரியாணி அரிசி – அரைக் கிலோ, நெய் – 2 ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன், மிளகாய் தூள் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சோம்பு –1 1/2 டீஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – 2, கிராம்பு – 4, அன்னாசிப்பூ – ஒன்று, தயிர் – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப், புதினா – அரை கட்டு, கொத்தமல்லி – அரை கட்டு, உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் ஒரு கப் தயிர் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அரிசியை அளந்து, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசிக்கு ஒன்றரை மடங்கு இருக்குமாறு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது ஒரு டம்ளர் அரிசிக்கு, ஒன்றரை டம்ளர் தண்ணீர்.

chicken

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் அன்னாசிப் பூ இவற்றை சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு பிரியாணி அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து இவற்றுடன் நன்றாக வதக்க வேண்டும்.

biriyani 2

அதன் பின் ஊற வைத்துள்ள கோழிக்கறி, புதினா மற்றும் கொத்தமல்லி இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி, ஐந்து நிமிடங்கள் மசாலாவுடன் சேர்ந்து வதங்குமாறு வேக வைக்க வேண்டும். பின்னர் இவற்றிற்கு தேவையான உப்பு, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு அரிசியைப் போட்டு குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பின் தீயைக் குறைத்து 7 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்.

biriyani 1

அதன் பின் அடுப்பை அணைத்து குக்கரை இறக்கி வைக்க வேண்டும். குக்கரின் பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பரிமாற வேண்டும். இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை ஒருமுறை சுவைத்தவர்கள் மீண்டும் வேண்டும் என்று திரும்பத் திரும்ப கேட்டு உங்களை தொந்தரவு செய்வார்கள்.

- Advertisement -