வாஸ்து படி உங்கள் வீட்டில் இதெல்லாம் சரியாக உள்ளதா ?

vastu
- Advertisement -

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு. இப்படியான நான்கு திசைகளை பற்றி நமக்கு நன்கு தெரியும். இந்த நான்கு திசைகளும் சேரும் பக்கவாட்டை கொண்டு தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு என்று பிரித்து வைத்துள்ளனர். இவ்வாறாக நம் பூமி எட்டு திசைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் நாம் கட்டும் வீட்டினை கட்டாயம் வாஸ்து சாஸ்திரத்தின் படி தான் கட்ட வேண்டும் என்பதை நமக்கு கூறியுள்ளார்கள். அதற்கு என்ன காரணம்? இந்த எட்டு திசைகளுக்கும் சொந்தக்காரர்கள் யார் யார்? இப்படியான பல தகவல்களை சற்று விரிவாகக் காணலாம்.

vasthu

கிழக்கு
சூரியன் கிழக்கு பக்கம் உதிக்கின்றது. நம் பூமி இந்த கிழக்கு பக்கத்தை நோக்கி தான் சுழல்கின்றது. காலையில் உதிக்கும் சூரியனிலிருந்து நாம் பெறப்படும் ஒளியில் அதிக சக்தி உள்ளது. அதன் சக்தியை உணர்ந்த முன்னோர்கள்,  கிழக்கு பக்கமாக நின்று “சூரிய நமஸ்காரம்” செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். சூரியனின் கதிர்வீச்சு ஒளியானது நம் வீட்டு வாசலில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் கிழக்கு பக்கமாக நம் வாசலை வைக்கின்றனர். கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும் சில நூல்கள் கூறுகின்றது. கிழக்கில் இந்திரன் வாசம் செய்கின்றார்.

- Advertisement -

மேற்கு
இது சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்ப்பக்கம் உள்ளது. கிழக்கு திசையில் இருந்து வந்த கடவுள் மேற்கு திசையாக சென்று சொர்க்கத்தை அடைந்தார்கள் என்றும் சில நூல்கள் கூறுகின்றது. ஆகையால் மேற்கு திசையை நோக்கி உள்ள வாசலும் சிறந்தது தான். வருண பகவான் மேற்கு திசையில் வாசம் செய்கின்றார்.

வடக்கு
சூரியன் உதிக்கும் திசையை பார்த்து நாம் நிற்கும் பொழுது நமக்கு இடப்புறம் உள்ள திசை வடக்கு ஆகும். குபேர பகவான் வடக்கு திசையில் வாசம் செய்கின்றார். வாஸ்து சாஸ்திரப்படி வடக்கு திசை மிகவும் சிறந்தது. இந்தத் திசையில் நம் வீட்டின் வாசல் அமைந்தால் செல்வ வளம் பெருகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

- Advertisement -

vasthu

தெற்கு
சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நாம் நிற்கும் பொழுது வலப்புறம் உள்ள திசை தெற்கு ஆகும். தெற்கு திசையில் வாசம் செய்பவர் “எமன்” ஆவார். தெற்கு பக்கம் நோக்கி வாசல் வைத்துள்ள வீடு என்றாலே நமக்கு ஒருவிதமான பயம் வந்துவிடும். காரணம் இந்த திசையில் எமன் வாசம் செய்கிறார் அல்லவா? ஆனால் வாஸ்து சாஸ்திர முறைப்படி தெற்கு திசையை நோக்கி கட்டப்பட்ட பல வீடுகள் பல தொழிலதிபர்களுக்கு சொந்தமாக உள்ளது என்பது பலரும் அறியப்படாத உண்மை.

வடகிழக்கு
வடக்கும் கிழக்கும் சேரக்கூடிய மூலைதான் வடகிழக்கு மூலை என்கின்றோம். வடகிழக்கு மூலை ஈசனுக்கு உரியது. வடகிழக்கு மூலையைத்தான் ஈசான மூலை என்கின்றோம். ஒரு வீட்டின் ஈசான மூலை சரியான முறையில் அமைந்துவிட்டால் அந்த வீட்டிற்கு எல்லாவிதமான செல்வங்களும் வந்து சேரும்.

- Advertisement -

direction

தென்கிழக்கு
தெற்கும் கிழக்கும் சேரும் மூலைதான் தென்கிழக்கு மூலை என்கின்றோம். தென்கிழக்கு மூலை அக்னிக்கு உரியது. இதனை அக்னி மூலை என்கின்றோம். ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலை சரியான விதத்தில் அமைய வேண்டும். இல்லை என்றால் பெண்களின் நலன், வம்பு, வழக்கு, தேவையில்லாத சண்டைகள் இவைகள் அனைத்தும் அடிக்கடி வர வாய்ப்பு உண்டு.

வட மேற்கு
வடக்கு மேற்கு சேரும் மூலையை தான் வடமேற்கு மூலை என்கின்றோம். இதில் வாயு பகவான் வாசம் செய்கின்றார். இதனை வாயுமூலை என்று கூறுவார்கள்.  நம் திருமண வாழ்க்கை, நம் வீட்டின் நிம்மதி, செல்வம், புகழ், அரசியல் செல்வாக்கு இவைகளெல்லாம் வடமேற்கு மூலையை வைத்தே அமைகின்றது.

vastu

தென்மேற்கு
தெற்கும் மேற்கும் சேரும் மூலையை தான் தென்மேற்கு மூலை என்கின்றோம். இதில் நைருதி வாசம் செய்கின்றாள். இதனை “நைருதி மூலை” என்று கூறுவார்கள். ஈசான்ய மூலைக்கு நேரெதிர் மூலையை நைருதி மூலையாக கருதப்படுகிறது. ஈசான மூலையை போன்று இதுவும் முக்கியமான ஒன்று. இதனை “கன்னி மூலை” என்றும் அழைப்பர்.

நம் முன்னோர்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள விதிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றி நாம் விரும்பியவாறு நம் இல்லத்தை அமைத்துக் கொண்டால் அனைத்து செல்வங்களையும் பெற்று, மன நிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்து படி உங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்

English Overview:
Here we have Vastu tips in Tamil, Vastu for house in Tamil. Vastu shastra in Tamil. Vastu directions in Tamil

- Advertisement -