உங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்

அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு முக்கிய அறையாக வரவேற்பு அறை இருக்கிறது. அந்த வரவேற்பு அறைக்கான எளிய வாஸ்து குறிப்புக்கள் இதோ.

hall

வாழ்க்கையில் நாம் ஒரு காரியத்தையும் ஒழுங்கின்றி செய்தாலும் பரவாயில்லை. ஆனால் நாம் வாழும் இடமான வீட்டை ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்பட்டு அமைத்து கொள்வதால் நமக்கு நன்மையையே உண்டாகும். அதற்கு உதவும் ஒரு பழமையான கட்டடக்கலை தான் வாஸ்து சாஸ்திரமாகும். அதில் வீட்டின் வரவேற்பறை எப்படி இருந்தால் அங்கு வாழ்பவர்களுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

vastu

தற்காலங்களில் பெரிய அளவில் கட்டப்படும் அனைவரின் வீடுகளிலுமே இடம்பெறும் ஒரு முக்கிய அறையாக வீட்டின் வரவேற்பு அறை இருக்கிறது. ஒரு வீட்டின் வரவேற்பறையை கண்ட உடனே அந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட வரவேற்பறையை நாம் எப்படி வைத்துக் கொண்டால் மேலும் பல சிறப்பான நன்மைகளை பெறமுடியும் என்பதை இங்கு காண்போம்.

வீட்டின் வரவேற்பறையை வெறுமையாக வைத்திருக்கக் கூடாது. இந்த வரவேற்பறையின் சுவர் நிறங்கள் மனதிற்கு இதம் தரும் வகையில் இருக்க வேண்டும். எனவே அடர் நிறங்களை வீட்டின் வரவேற்பறைக்கு தீட்ட கூடாது. வரவேற்பறையின் சுவற்றில் மலர்கள், பழங்கள் போன்றவற்றின் படங்களை மாட்டி வைக்கலாம். அல்லது சாந்தமான தெய்வங்களின் படங்களை மாட்டி வைக்கலாம். வீட்டு வரவேற்பறைக்கு முன்பாக ஒரு சிறிய விநாயகர் சிலையை வைத்து, தினமும் அச்சிலைக்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் காட்டி வழிபடுவதால் வீட்டிற்குள் எப்போதும் நன்மையான சக்திகள் நுழைவதற்கு வழிவகுக்கும்.

fish tank

வீட்டு வரவேற்பறையில் சுவர் மட்டும் ஜன்னல்கள் தினமும் பகல் பொழுது முழுவதும் திறந்து இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல சக்திகள் வீட்டுக்குள் நுழைவதற்கு உதவியாக இருக்கும். ஒரு சிலர் வீட்டின் வரவேற்பறையில் மீன் தொட்டி வைக்க விரும்புவர். அப்படி மீன் தொட்டி வைக்க விரும்புபவர்கள் அந்த அறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் மீன் தொட்டிகளை வைக்கலாம்.

- Advertisement -

வரவேற்பறையில் தினமும் ஒரு ஜாடியில் வாசமிக்க மலர்களைக் வைப்பது நல்ல நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் நிறைந்திருக்க வழிவகுக்கும். எக்காரணம் கொண்டும் செயற்கை காகித பூக்களை வைக்கக் கூடாது. வீட்டின் வரவேற்பறையில் தொலைக்காட்சி பெட்டி வைக்க விரும்புபவர்கள், அந்த அறையின் தென்கிழக்குப் பகுதியில் தொலைக்காட்சியை பெட்டியை வைக்கலாம். அழகு என்கிற பெயரில் போன்சாய் மரங்கள், பல வகையில் இருக்கும் கள்ளிச் செடிகள் போன்றவற்றை வரவேற்பறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கதவுகள் பொருத்த வாஸ்து குறிப்புக்கள்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hall vastu tips in Tamil. It is also called Veedu vastu shastra in Tamil or Vastu kurippu in Tamil or Vastu shastra in Tamil or Veedu varaverpu arai in Tamil.