Dish TV யின் அதிரடி பண்டிகை சலுகை. 250 சேல்கள் வெறும் 219 ரூபாயில்.

Dish TV
- Advertisement -

டிடிஎச் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்பை தேர்ந்தெடுக்கும் பொழுது வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக இருந்தது டிஷ்டிவி தான். சில நாட்களுக்கு முன்பு வரை டிஷ்டிவி சந்தாதாரர்கள் எண்ணிக்கை தான் நாட்டில் சிறந்த டிடிஎச் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கொண்ட டிடிஎச் நிறுவனமாக இருந்தது.

Dish-TV

இதனை முறியடிக்கும் வகையில் டாடா ஸ்கை சில சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் திருப்பியது. இருப்பினும் டிஷ்டிவி சரிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை மேலும் டிஷ்டிவி இனைப்புகளை வாடிக்கையாளர்கள் முற்றிலுமாக விட்டு விட்டு செல்லவில்லை. இதற்கு முக்கிய காரணம் யாதெனில் நுகர்வோர் முன்னிலையில் டிஷ்டிவி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில பல முயற்சிகளை செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஹைபிரிட் செட்டாப் பாக்ஸ் அறிமுகப்படுத்துவதாக டிஷ்டிவி அறிவித்துள்ளது. மேலும் பண்டிகை சலுகையையும் டிஷ்டிவி அறிவித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

DIsh TVஇந்த பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக டிஷ் டிவி ஒரு சில சேனல்களை பழைய விலைக்கே வழங்க உள்ளது. மேலும் டிராய் கட்டண விதி வருகைக்குப்பின் விலை சற்று அதிகம் ஆகின. ஆனால் தற்போது அதனை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு திருப்தியான ஆஃபர்களை டிஷ்டிவி வழங்க உள்ளது.

அதன்படி இந்த புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்கள் பெற இரண்டு வருட சந்தா காலத்தை அவர்கள் தேர்வு செய்தே ஆக வேண்டும். அப்படி அவர்கள் தேர்வு செய்தால் நீண்ட காலத்திற்கு அவர்கள் இந்த குறைந்த விலையை அனுபவிக்கும் விதமாகவும் மேலும் வாடிக்கையாளர்களை நீண்ட நாட்கள் தக்க வைக்கவும் டிஷ்டிவி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

இந்தப் பண்டிகை கால சலுகையின்படி டிஷ்டிவி சந்தாதாரர்கள் குடும்ப பொழுதுபோக்கு HD சேனல்களை 24 மாதங்களுக்கு 5256 ரூபாய்க்கு பெறலாம். இதன் மாதாந்திர செலவு 219 ரூபாய் மட்டுமே. மற்ற விலை அடிப்படையில் பார்த்தால் இந்த சலுகை 299 ரூபாய்க்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dish TVஅதனைத்தொடர்ந்து குடும்ப ஆங்கில HD பேக் 7,800 ரூபாய்க்கு அதாவது மாதம் 325 ரூபாய் செலவில் கிடைக்கும். மற்ற விலை அடிப்படையில் பார்த்தால் இதே சலுகை 449 ரூபாய்க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடும்ப கிரிக்கெட் பேட் HD 6,500 ரூபாய்க்கு கிடைக்கும் அதாவது மாதாந்திர செலவு 275 ரூபாய். மற்ற விலை அடிப்படையில் பார்த்தால் 349 ரூபாய்க்கு இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுபோன்ற இரண்டு ஆண்டுகள் கவர்ச்சிகரமான சலுகையை டிஷ்டிவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -