உங்க வீட்டில் ‘பாமாயில்’ இருந்தால் போதும், மிகக் குறைந்த செலவில் ‘பாத்திரம் தேய்க்கும் சோப்’ நீங்களே செய்து விடலாம்.

vessel-wash-palm-oil
- Advertisement -

பாத்திரம் தேய்ப்பதற்கு பிரத்தியேகமாக புதுசு புதுசாக சோப்புக்கட்டிகள் விற்பனைக்கு வருகின்றன. குறைந்தது ஒரு சோப்பின் விலை 40 முதல் 50 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து நாம் வாங்கினாலும் அது ஒரு மாதத்திற்கு கூட வருவதில்லை. அதற்குள்ளாகவே அது தீர்ந்துவிடும். அதைவிடக் கொடுமை என்னவென்றால் பாதி சோப்பு கரைந்ததும் மீதியிருக்கும் சோப்பில் நுரை கூட வருவதில்லை. வீணாக தான் போகிறது. அதற்கு பதிலாக நாமே சோப்பு தயார் செய்து விடலாம். நம் வீட்டில் இருக்கும் பாமாயில் இதற்கு முக்கியமாக தேவைப்படுகிறது. பாமாயில் இருந்தால் சுலபமாக இந்த சோப்பை தயாரித்து பயன்படுத்தலாம். இதை நன்றாக கற்றுக் கொண்டு நீங்கள் தொழிலாகவும் செய்து வரலாம். இதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. குறைந்த செலவில் எப்படி பாத்திரம் கழுவும் சோப் நாமே தயாரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

palm-oil

பாமாயில் ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் அதை பெரும்பாலான வீடுகளில் பூரி சுடவும், அப்பளம் சுடவும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மாதம் ஒரு வகை எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது தான் நல்ல முறையாகும். ஒரே வகை எண்ணெயை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தினால் அதனால் சில விளைவுகள் உண்டாகக்கூடும். ஒரு மாதம் சூரியகாந்தி எண்ணெய் உபயோகித்தால், அடுத்த மாதம் ரைஸ் பிராண்டு ஆயில், அதற்கு அடுத்த மாதம் பாமாயில், கடலெண்ணை என்று வகை பிரித்து உபயோகிக்கலாம். இதனால் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

பாத்திரம் கழுவும் சோப்பு தயாரிக்க தேவையான பொருட்கள்:
பாமாயில் – 3 கப், காஸ்டிக் சோடா – 1/2 கப், சபீனா – 1/2 கப், தண்ணீர் – 11/2 கப், சலவை சோடா – 1/2 கப், ஃபுட் கலர் – தேவையான அளவு, லெமன் கிராஸ் ஆயில் – 2ml, சமையல் சோடா – 50 கிராம்.

caustic-soda

செய்முறை விளக்கம்:
முதலில் சோப்பு தயாரிக்க காஸ்டிக் சோடா கட்டாயம் தேவைப்படும். காஸ்டிக் சோடா குழாய்களில் இருக்கும் அடைப்பை சரி செய்யவும் மற்றும் பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுகிறது. இயற்கை அசுத்தங்களை நீக்கும் திறன் படைத்தது. காஸ்டிக் சோடா உபயோகிப்பதால் நீங்கள் கைகளில் கையுறைகள் அணிவது நல்லது. அதே போல் இதை செய்யும் பொழுது நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்து செய்வது நல்லது.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் காஸ்டிக் சோடா அரை கப் அளவிற்கு சேர்த்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஆறவிடவும். ஆறியதும் பின்னர் அதில் பாமாயில் சேர்க்கவும். காஸ்டிக் சோடா உடன் பாமாயில் சேர்க்கப்படும் பொழுது ஒருமாதிரி கஞ்சி தன்மையுடன் உங்களுக்கு கிடைக்கும். பின்னர் அதில் தேவையான அளவில் ஃபுட் கலர் சேர்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சோப் நிறமாக இல்லாமல் வெள்ளையாக வந்துவிடும். உங்களுக்கு பிடித்தமான நிறம் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

dishwash-bar

இப்போது இதில் சபீனா, சலவை சோடா மற்றும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ளவும். இவைகள் நுரைப்பதற்கும், துர்நாற்றம் போக்கவும் பயன்படும். அதன் பின் லெமன் கிராஸ் ஆயில் சேர்த்து அந்த கலவையை நன்றாக பீட் செய்ய வேண்டும். இவை சோப்பு வாசனை பெற பயன்படுகிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து சோப் செய்ய தேவையான கலவை இப்போது உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

vessel-wash

இந்த கலவையை தேவையான அளவுள்ள கப்களில் ஊற்றி ஒரு பத்து நாட்கள் வரை காய விடுங்கள். இது எந்த அளவிற்கு நன்றாக காய்ந்து விடுகிறதோ அந்த அளவிற்கு நீங்கள் பயன்படுத்த சரியாக இருக்கும். ஒருமுறை செய்து வைத்தால் பத்து சோப்புகள் வரை உங்களுக்கு கிடைக்கும். இரண்டு மாதத்திற்கு தாராளமாக பாத்திரம் தேய்க்க இந்த சோப்பு உங்களுக்கு நிச்சயம் உபயோகப்படும்.

இதையும் படிக்கலாமே
எந்த செலவும் இல்லாமல் உங்கள் ‘பாத்ரூம்’ வருடம் முழுக்க வாசனையாக இருக்க இந்த 4 பொருள் போதுமே!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -