இந்த வருடம் கேதார கௌரி விரதம் அக்டோபர் 24? அக்டோபர் 25? சாஸ்திரம் என்ன சொல்கிறது? நோன்பின் முழு பலனை பெற இந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

nondu
- Advertisement -

இந்த வருட தீபாவளியில் நோன்பு எடுப்பதில் எல்லோருக்கும் ஒரு குழப்பம். கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் அக்டோபர் 24 இருப்பதா? அக்டோபர் 25 இருப்பதா? என்று, அதற்கான தெளிவான விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 5:12 மணிக்கு அமாவாசை பிறக்கின்றது. அக்டோபர் 24ஆம் தேதி நோன்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை 6:15 லிருந்து 7:15க்குள் கலசம் நிறுத்தி கேதார கௌரி நோன்பு விரதத்தை எடுக்கலாம். திங்கட்கிழமை அன்றே உங்களுடைய தீபாவளி நோன்பை தாராளமாக கடைபிடிக்கலாம். தவறு கிடையாது.

அமாவாசை பிறப்பது மாலை 5:12 மணிக்கு தான். காலையில் இலையை. எப்படி நோன்பு எடுப்பது என்ற சந்தேகம் இருக்கும். (திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் கலசம் நிறுத்தி, கேதார கௌரி நோன்பு வழிபாடு செய்வதும் தவறு கிடையாது.) உங்களுக்கு அக்டோபர் 24 திங்கட்கிழமை நோன்பு எடுப்பதற்கு விருப்பமில்லை எனும் பட்சத்தில், அன்று நோன்பு எடுக்காமல் விட்டுவிடலாம். அதுவும் தவறு கிடையாது. மறுநாள் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி காலை 7:15 விருந்து 8:15 பதினைந்துக்குள் கலசம் நிறுத்தி நோன்பு எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அக்டோபர் 25ஆம் தேதி காலை பெரும்பாலும் எல்லா கோவில்களும் காலை 10 மணி வரை திறந்திருக்கும். 10 மணிக்குள் நோன்பு நூற்று வீட்டில் பூஜை செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். அக்டோபர் 25 காலை 10 மணிக்கு மேல் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:10க்கு அமாவாசை முடிவடைகிறது. அக்டோபர் 25ஆம் தேதி கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் காலையிலேயே நீங்கள் உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். (அக்டோபர் 25ஆம் தேதி காலையிலேயே அமாவாசை விரதம் இருந்து, முன்னோர்களுக்கு வழிபாடு செய்து திதி தர்ப்பணம் கொடுப்பவர்களும் காலை 10 மணிக்குள் எல்லா பூஜையையும் முடித்து சாப்பாடு சாப்பிட்டு விரோதத்தை முடித்து விட வேண்டும்.) என்றைக்கு நோன்பை எடுத்தாலும், நம்பிக்கையோடு, மனதிருப்தியோடு, நிறைவாக பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு முழு பலன் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு:
அக்டோபர் 25ஆம் தேதி கிரகண நேரம் மாலை 5:10 லிருந்து 5:45 வரை இருக்கிறது. மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டை கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு கோவிலுக்கு சென்று இறை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக செய்யலாம். அக்டோபர் 25ஆம் தேதி காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம். வீட்டிற்கு உள்ளேயே இருங்கள். நல்ல நாள் கிழமை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இருந்தால் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு மேல் கோவிலுக்கு சென்று இறை தரிசனம் செய்யலாம். (கர்ப்பிணி பெண்கள் அக்டோபர் 25 காலை முதலில் வெளியில் வராதீங்க. கிரகண நேரத்தின் போது ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க.)

- Advertisement -

அக்டோபர் 25 கிரகணம் நேரத்தின்போது, உங்கள் வீட்டில் இருக்கும் உணவு பண்டங்களில் எல்லாம் கட்டாயமாக தர்பை புல்லை கிள்ளி போட வேண்டும். காலை 10 மணிக்கு வீட்டில் சமைத்த சாதம் மிச்சமிருந்தால் அதில் இந்த தர்ப்பை புல்லை போட்டு விடுங்கள். நீங்கள் கர்ப்பிணியாக இருந்தால் தர்ப்பை புல்லை நீங்கள் கிள்ளக்கூடாது. உங்கள் கணவரை மீதமான சாப்பாட்டில் தர்ப்பை புல்லை கிள்ளி போட சொல்லுங்கள். உங்கள் வீட்டில் யாருமே இல்லை எனும் பட்சத்தில் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு கூப்பிடுங்கள். கர்ப்பிணி பெண்கள் தயவு செய்து தர்பை புல்லை கிள்ளாதீங்க.

இதையும் படிக்கலாமே: இந்த வருடம் முழுவதுமே செல்வ செழிப்புடன் வாழ தீபாவளி அன்று மறக்காமல் செய்யக்கூடிய இரண்டு விஷயங்களும், வாங்க வேண்டிய இரண்டு மங்களப் பொருட்களும் அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோமா?.

அதேபோல தர்ப்பை புல்லை கிரகண நேரத்தின்போது கிள்ளக்கூடாது. கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சாப்பாட்டில் கிள்ளி போட்டு விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கிரகண நேரத்தின் போது சூரியனின் கதிர்வீச்சு நம் உணவுப் பொருட்களை தாக்காமல் இருக்கத்தான் இந்த தர்ப்பை புல்லை உணவில் சேர்க்கின்றோம். ஆன்மீக ரீதியாக இருந்தாலும் சரி, அறிவியல் ரீதியாக இருந்தாலும் சரி, மேல் சொன்ன விஷயங்களை சரிவர கடைபிடிக்கும் போது உங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -