தீபாவளி நோன்புர்க்கு செய்யக்கூடிய இனிப்பான சுசியத்தை ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள்

susiyam
- Advertisement -

தீபாவளி பண்டிகை என்றாலே அதில் இனிப்பு பலகாரங்கள் தான் அதிகமாக இருக்கும். அவ்வாறு தீபாவளியை அடுத்து வரும் அமாவாசை தினத்தில் இந்துக்கள் அனைவரும் நோன்பு கொண்டாடுவார்கள். அவ்வாறு அந்த நோன்பு தினத்தில் தவறாமல் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம் தான் சுசியம். இதனை மிகவும் எளிமையாக செய்து விடலாம். ஆனால் ஒரு சிலருக்கு சரியான பக்குவம் தெரியாததால் சுசியத்தின் சுவை குறைவாக இருக்கும். வாருங்கள் இந்த சுசியத்தை எவ்வாறு முறையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sweets

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப், மைதா மாவு – முக்கால் கப், உப்பு – இரண்டு சிட்டிகை, வெல்லம் – முக்கால் கப், தேங்காய் – அரைமூடி, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி கடலைப் பருப்பை குக்கரில் சேர்த்து பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து பருப்பை ஒன்னும் பாதியுமாக மசித்துக் கொள்ள வேண்டும்.

kadalai-paruppu

அதன் பிறகு அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முக்கால் கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பின் மீது வைத்து வெல்லத்தை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அதனை அப்படியே ஆற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு பேனை அடுப்பின் மீது வைத்து மசித்த கடலை பருப்பை அதில் சேர்த்து அதனுடன் செய்து வைத்துள்ள வெல்லக் கரைசலையும் வடிகட்டி சேர்க்க வேண்டும். பின்னர் இவை இரண்டையும் நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் வெல்லக் கரைசலும் கடலை மாவும் சேர்த்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

pan

அதன் பிறகு ஒரு கப் மைதா மாவுடன் இரண்டு சிட்டிகை உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள கடலை மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

fry-susiyam

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும். இவ்வாறு ஒரு முறையில் நான்கு அல்லது ஐந்து உருண்டைகளை போடலாம். இவை நன்றாக சிவந்து வந்ததும் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீதமுள்ள அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுசியம் தயாராகிவிட்டது.

- Advertisement -