Happy Diwali 2024 Wishes : மதங்களை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு விழாவாக உள்ளது தீபாவளி. பட்டாசு ஒளியும், தீப ஒளியும் ஊருக்கும் பரவ, பார்க்கும் முகங்கள் அனைத்திலும் சிரிப்பு பொங்க, வாசல் எங்கும் வண்ண வண்ண கோலங்கள் அலங்கரித்திட, எல்லாரும் கொண்டாடும் இந்த தீபாவளில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி கவிதைகள் இதோ.
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க இனிய தீபாவளி நல்லவாழ்த்துக்கள்.

வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை

பிரிந்தோர் சேர்ந்து இனிமையாய் இனைந்து குதூகலத்தோடு கொண்டாடுவோம் தீபாவளியை

வரிசையாய் விளக்கேற்றி, இருளை விளக்கி, அருளை சேர்த்து இனிமையாய் கொண்டாடுவோம் தீபாவளியை

துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளியை

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பு பொங்க, மகிழ்ச்சி நிறைய, சொந்தங்கள் இணைந்து கொண்டாடுவோம் தீபாவளியை

என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சூழ்ச்சிகளும் தீமைகளும் தறிகெட்டு ஓட, நன்மையும், அன்பும் நாடி வர இன்பமாய் கொண்டாடுவோம் தீபாவளியை

சகல விதமான சந்தோஷங்களும் உங்களை வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீப வெளிச்சம் பொங்கும் இந்த தீபாவளி நாளில், உங்கள் வாழ்வில் அனைத்து பிரகாசமும் நிறைந்திருக்கட்டும்!202
நரகாசுரனை பகவான் விஷ்ணு அழித்ததால் நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். சரி இப்போது நரகாசூரன் எப்படி பிறந்தான், அவனுடைய அழிவு எப்படி நிகழ்ந்தது இப்படி சில தகவல்களை பார்ப்போம்.
பகவான் விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து அசுரர்களை கொன்று குவித்துக்கொண்டிருந்த போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் தான் நரகாசூரன். என்ன தான் தெய்வ சக்திகளுக்கு அவன் பிறந்திருந்தாலும், அசுர வதம் நடக்கும் வேலையில் அவன் பிறந்ததால் அவனுக்குள்ளம் அசுரனுக்கான அத்தனை குணங்களும் இருந்தது. மனிதனாக பிறந்து அசுரர் குணங்களை கொண்டிருந்ததால் அவன் நரக அசுரன் என்று அழைக்கப்பட்டான். அந்த பெயரே காலப்போக்கில் நரகாசூரனாக மாறியது.
மனிதர்கள், தேவர்கள் என பலருக்கும் நரகாசூரன் தொல்லை கொடுக்க தொடங்கினான். அவனது அட்டூழியம் எல்லை மீறியது. அதனை தொடர்ந்து மகாவிஷ்ணு அவனை அழிக்க முடிவெடுத்தார். ஆனால் தன் அன்னையை தவிர வேறு யாராலும் அவனை அழிக்க இயலாது என்ற ஒரு வரத்தை அவன் பெற்றிருந்தான். அதனால் அவனை கொள்ள ஒரு சூழ்ச்சியை செய்தார் விஷ்ணு. அதன் படி நாராயசூரனை போருக்கு அழைத்தார் விஷ்ணு. அப்போது நரகாசூரன் எய்த ஒரு அன்பு விஷ்ணு மேல் பட்டதும் அவர் மயங்கி கீழே விழுந்தார். அதை கவனித்த சத்திய பாமா, கடும் கோபத்தோடு நரகா சூரனை தன்னோடு போர் புரியும் படி அழைத்தார். சத்திய பாமா பூமி தாயின் வடிவம் என்பது நரகா சூரனுக்கு தெரியாது. அதனால் அவன் சத்திய பாமாவோடு போரிட்டு மடிந்தான்.
நரகா சூரன் மடியும் வேளையில் தான் சத்திய பாமா தன் தாய் என்பதை அவன் உணர்தான். தாயே நான் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் பெரும் துன்பங்களை கொடுத்துள்ளேன். அதனால் நான் மடியும் இந்த நாளை மக்கள் மகிழ்ச்சியோடு இனிப்பு வழங்கி கொண்டாடவேண்டும் என்று பணிவோடு கேட்டான் நரகாசூரன். பகவான் விஷ்ணுவும், சத்திய பாமாவும் அதற்கான வரத்தை அவனுக்கு அளித்தனர். அன்று முதல் நரகா சூரன் இறந்த நாளில் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
English Overview:
Here we have Happy Deepavali Wishes Images, Quotes, Whatsapp Status, Diwali wishes 2024 in Tamil, Deepavali valthukkal in Tamil.